BREAKING NEWS

Category 5

Category 6

Category 7

From our Blog

Thursday, July 4, 2013

உடைத்தகடலை (பொட்டுக்கடலை) -தேங்காய்ச் சட்டினி

 உடைத்தகடலை (பொட்டுக்கடலை) -தேங்காய்ச் சட்டினி

தேவைப்படும் பொருள்கள்:
நன்கு முற்றிய தேங்காயின் துருவல் - 1 கிண்ணம்
உடைத்த கடலை - 1 கிண்ணம்
பச்சை மிளகாய் அல்லது வற்றல் மிளகாய்- 10 (அல்லது தேவைப்படி)
கடுகு - முக்கால் தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 4 ஆர்க்குகள்
பெருங்காயப்பொடி அல்லது கரைசல் - ஒன்றரை அல்லது 2 தே. க.
தாளிக் எண்ணெய் - சிறிதளவு

உடைத்த கடலையைச் சிறிது எண்ணெய்யில் சற்றே வறுத்துக்கொள்ளவும். அப்போதுதான் அதன் பச்சை வாசனை போகும். (அதைத் தண்ணீரில் களைந்து நீரை வடித்துவிட்டு வறுப்பது இன்னும் நல்லது. ஏனெனில், உடைத்த கடலையில் - அது நாள்பட்டதாயின், ஒரு மக்கல் வாசனை வரும். களைந்தால் அது போய் விடும்.)
----------------------------------------------------------------------
முன்னம் கூறிய சட்டினிகளைப் போன்றே இதையும் அரைக்கவும்.

தனித் தேங்காய்ச் சட்டினி - பச்சை மிளகாயுடன்.

தனித் தேங்காய்ச் சட்டினி - பச்சை மிளகாயுடன்.

தமிழக மக்களின் மிகப் பரவலான காலை உணவாகிய இட்டிலியைப் பற்றி நினைத்ததுமே ஞாபகம் வருவது சட்டினியும் சாம்பாரும்தானே? முதலில் தேங்காய்ச் சட்டினியைப் பார்ப்போம்:

தேவைப்படும் பொருள்கள்:
முற்றலான தேங்காய் - ஒன்று
பச்சை மிளகாய் - 5 அல்லது 6 (அல்லது தேவைக்கேற்ப)
உப்பு - 1 தேக்கரண்டி ( பெருப்க்காயப் பொடி / கரைசல் - 1 தேக்கரண்டி
கடுகு - 1 / 4 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 ஆர்க்குகள்
எண்ணெய் - தாளிக்கச் சிறிதளவு

முதலில் தேங்காயைத் துருவிக்கொள்ளவும். இந்தத் துருவல், பச்சைமிளகாய், உப்பு ஆகியவற்றை ஒன்றாய்ச் சேர்த்து மசிக்கவும். மின் அம்மியியில் முதலில் பச்சடி மிளகாயைப் போட்டு அதன் மேல் தேங்காய்த் துருவலைப் போடுவது நல்லது. இல்லாவிட்டால், மிளகாய் மசியாது. சிலர் புளிச்சுவைக்காக ஒரு கோலியளவு புளி சேர்த்து அரைப்பார்கள். புளி ஆகாதவர்கள் - அல்லது வேண்டாம் என்று நினைப்பவர்கள் - சட்டினியை அரைத்து முடித்த பிறகு அதில் தேவைக்கேற்ப எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து கொள்ளலாம். அல்லது தயிரும் சேர்க்கலாம். சில பச்சை மிளகாய்கள் அதிகமாய்க் காரும். அப்போது சட்டினியில் தயிரைச் சேர்ப்பது காரம் குறைய உதவும். கடைசியாகக் கறிவேப்பிலைகளைக் கிள்ளிப் போடவும். தேங்காய்ச் சட்டினியை அதிக நேரம் பாதுகாக்க முடியாது. ·ப்ரிட்ஜில் கூட ரொம்ப நேரத்துக்குச் சுவை குன்றாமல் இருக்காது. எனவே 3, 4 மணி நேரத்துக்குள் செலவழிப்பது நல்லது.
-----------------------------------------------------------------
ஆ) தனித் தேங்காய்ச் சட்டினி - காய்ந்த மிளகாயுடன்

பச்சை மிளகாய் போட்டுச் செய்யும் தேங்காய்ச் சட்டினியைப் பொன்ற அதே செய்முறைதான். ஒரே ஒரு வேறுபாடு என்னவெனில், மிளகாய் வற்றலை முதலில் சிறிது எண்ணெய்யில் வறுத்துக்கொண்டு பின்னர் தேங்கயுடன் சேர்த்து அரைக்க வேண்டும்.

பாம்பே சட்னி

தேவையானவை :

1/2 ஸ்பூன் கடுகு
1/2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
3 -4 பச்சை மிளகாய்
2 பெரிய வெங்காயம்
4 டேபிள் ஸ்பூன் கடலை மாவு
2 தக்காளி
கறிவேப்பிலை
கொத்துமல்லி 
உப்பு
கொஞ்சம் எண்ணை

செய்முறை: 
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் என் அனைத்தயும் மிகவும் பொடியாக நறுக்கவும்.
வாணலி இல் எண்ணை வைத்து , கடுகு, உளுந்து போட்டு தாளிக்கவும். அரிந்து வைத்தத்தை போட்டு வதக்கவும். 
கடலை மாவில் தண்ணீ ஊற்றி கரைத்து வாணலி இல் ஊற்றவும்.
நன்கு கொதித்து கெட்டியானதும் (சட்டினி போல் ஆனதும் ) இறக்கவும்.
கறிவேப்பிலை கொத்தமல்லி தூவி இறக்கவும். 
தோசை இட்லி கு நல்லா இருக்கும்.

வட கறி

தேவயானவை :

500 கிராம் வெங்காயம்
250 கிராம் கடலை பருப்பு
250 கிராம் தக்காளி 
250 கிராம் Vegetable Shortening அதாவது vegetable ghee (dalda)
50 கிராம் பொட்டுக்கடலை
50 கிராம் பூண்டு 
சோம்பு, இஞ்சி , கச காஸா தலா 25 கிராம்
ஏலம், கிராம்பு தலா 2
பட்டை கொஞ்சம் (2 -3 துண்டுகள் )
1/2 முடி தேங்காய்
மஞ்சள் பொடி
5 -6 பச்சை மிளகாய் 
கொத்துமல்லி 
உப்பு

செய்முறை:
கடலை பருப்பை 1/2 மணி நேரம் ஊரவைக்கவும்.
ஊறினதும், பாதி சோம்பு போட்டு ,உப்பு போட்டு மிக்சி இல் கரகரப்பாக அரைக்கவும்.
தண்ணீர் மட்டா விடணும். மாவு கெட்டியாக இருக்கணும்.
வாணலி இல் டால்டா போட்டு, பகோடா போல் போட்டுக்கொள்ளவும்.
(இதுவே ரொம்ப டேஸ்ட் ஆக இருக்கும் புன்னகை )
தனியே வைக்கவும்.
மற்ற எல்லா பொருட்களையும் மிக்சி இல் போட்டு அரைக்கவும் 
ஒரு உருளி இல் டால்டா போட்டு, சோம்பி தாளிக்கவும்.
அரைத்த விழுதை போட்டு, உப்பு மஞ்சள் பொடி போட்டு நல்லா கிளறவும்.
மறு புறம், எல்லா பகோடாக்களையும் இரண்டு இரண்டாக உதிர்த்து வைக்கவும். 
உருளி இல் உள்ள மசாலா நான்கு கொடித்து, எண்ணை பிரிந்து வந்ததும், இந்த பகோடா துண்டுகளை போட்டு, 2 டம்பளர் தண்ணீரும் விடணும்.
அது மொத்தம் கொதித்ததும், கொத்தமல்லி தூவி இறக்கணும்.
அருமையாக இருக்கும். 
இட்லி, தோசை, பூரி என் எல்லாவற்றுக்கும் தொடுக்கலாம்ம் 
வெறுமனே வும் சாப்பிடலாம்

ப்ராக்கோலி சப்பாத்தி

ப்ராக்கோலி சப்பாத்தி

 
 சப்பாத்தியில் நிறைய வகைகள் உள்ளன. அதில் ஒன்று தான் ப்ராக்கோலி சப்பாத்தி. இந்த சப்பாத்தி உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. ஏனெனில் ப்ராக்கோலியில் நிறைய சத்துக்களானது அடங்கியுள்ளது. எனவே இந்த ப்ராக்கோலியை உணவில் அதிகம் சேர்த்தால், பல நோய்களில் இருந்து தப்பிக்க முடியும். அதிலும் ப்ராக்கோலியை சாப்பிட பிடிக்காதவர்கள், அதனை சப்பாத்தியாக செய்து சாப்பிடலாம்.

இது ஒரு சிறந்த காலை உணவும் கூட. சரி, அந்த ப்ராக்கோலி சப்பாத்தியின் செய்முறையைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - 3 கப்
உப்பு - தேவையான அளவு
வெதுவெதுப்பான நீர் - 1 கப்

உள்ளே வைப்பதற்கு...

ப்ராக்கோலி - 1 (துருவியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
மாங்காய் தூள் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்திற்கு மென்மையாக பிசைந்து, சிறிது நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, துருவிய ப்ராக்கோலியை சேர்த்து, 3-4 நிமிடம் வதக்கி விட வேண்டும்.

பின்பு சீரகப் பொடி, மல்லி தூள், மாங்காய் தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, 5-6 நிமிடம் மூடி வைத்து வேக வைத்து இறக்கி, குளிர வைக்க வேண்டும்.

அடுத்து கோதுமை மாவை சிறு உருண்டைகளாக்கிக் கொள்ள வேண்டும்.

பின் அவற்றில் ஒன்றை எடுத்து, சிறு சப்பாத்தியாக தேய்த்து, அதன் நடுவே ப்ராக்கோலி கலவையை வைத்து, நான்கு புறமும் மூடி, மீண்டும் சப்பாத்தியாக தேய்க்க வேண்டும். இதேப் போன்று அனைத்து உருண்டைகளையும் செய்ய வேண்டும்.

இறுதியில் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல்லானது காய்ந்ததும் எண்ணெய் தடவி, தேய்த்து வைத்துள்ள சப்பாத்திகளை ஒவ்வொன்றாக போட்டு, முன்னும் பின்னும் எண்ணெய் ஊற்றி, வேக வைத்து எடுக்க வேண்டும்.

இப்போது சூப்பரான ப்ராக்கோலி சப்பாத்தி ரெடி!!! இதனை சட்னியுடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.

Monday, July 1, 2013

கம்மங்கொழுக்கட்டை


தேவையான பொருட்கள்:

கம்பு - 1/4 கிலோ,
வெல்லம் - 200 கிராம்,
துருவிய தேங்காய் - 1 மூடி,
ஏலக்காய் - 4.

செய்முறை:

கம்பை மிக்ஸியில் போட்டு ஒரு ஓட்டு ஓட்டி, புடைத்தால், மேல் தோல் முழுதும் வந்து விடும்.
பிறகு வெறும் வாணலியில் இட்டு, கம்பு சிவக்கும் வரை வறுக்கவும்.
வறுத்த கம்பை நைசாக அரைக்கவும்.
வெல்லத்தை தூளாக்கி, 1 டம்ளர் தண்ணீரில் கரைத்து, வடிகட்டி, லேசாக கொதிக்க வைக்கவும்.
கம்பு மாவு, தேங்காய், பொடித்த ஏலக்காய் சேர்த்து கலக்கவும்.
அதில் வெல்லப்பாகை ஊற்றி கிளறவும்.ஆறியபின், கொழுக்கட்டைகளாகப் பிடிக்கவும்.
பிடித்த கொழுக்கட்டைகளை இட்லிப்பானையில் வைத்து ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.
நல்ல வாசனையும், சுவையும் உள்ள, குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சத்தான, கொழுக்கட்டைகள் தயார்.

மேலும் அறிய இந்த லிங்க்கை அழுத்தவும் http://www.usetamil.net/t36552-topic#ixzz2Xqath2YA
Under Creative Commons License: Attribution

சூப்பர் காளான் 65 உங்கள் வீட்டில் மணக்க!


பட்டன் காளான் – 100 கிராம்
தயிர் – 1 தேக்கரண்டி
இஞ்சிபூண்டு விழுது – 1 தேக்கரண்டி
சிக்கன் 65 மசாலா / மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
கார்ன் ஃப்ளார் – 1 தேக்கரண்டி
ரெட் கலர் – சிறிது
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – தேவைக்கு
எண்ணெய் – பொரிக்கத்தேவையான அளவு

செய்முறை

ஒரு பாத்திரத்தில் துண்டுகளாக நறுக்கிய காளான்,இஞ்சி பூண்டு விழுது,தயிர்,சிக்கன் 65 மசாலா,கார்ன் ஃப்ளார்,ரெட் கலர்,கறிவேப்பிலை,உப்பு சேர்த்து கலந்து நன்றாக பிரட்டி 15 நிமிடம் வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் காளான்களை போட்டு சிவக்க பொரித்தெடுக்கவும்.
சுவையான காளான் 65 ரெடி.

மேலும் அறிய இந்த லிங்க்கை அழுத்தவும் http://www.usetamil.net/t36551-65#ixzz2XqaTErdC
Under Creative Commons License: Attribution
 
Copyright © 2013 சமையல் குறிப்புக்கள்
Shared by WpCoderX