skip to main
|
skip to sidebar
From our Blog

Tamil Cooking recipe for Peerkangai Chutney
தேவையான பொருட்கள்
- பீர்க்கங்காய் - 2
- தக்காளி -4
- வெங்காயம்-1
- உப்பு -தேவையான அளவு
- பெருங்காய தூள் -1 சிட்டிகை
- மிளகாய் தூள் -2 மேஜை கரண்டி
தாளிக்க:
- கடுகு - 1 மேஜை கரண்டி
- உளுத்தம் பருப்பு -1 மேஜை கரண்டி
- கறிவபில்லை- 6
செய்முறை
- குக்கரில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் பீர்க்கங்காய், தக்காளி வதக்கவும்
- பின் அதில் மிளகாய் தூள் ,உப்பு, பெருங்காய தூள் , தண்ணீர் சேர்த்து குக்கர் மூடி வெயிட் போட்டு 1 சத்தம் 5 நிமிடம் சிறு தியில் வைத்து நிறுத்தவும்
- பின் குக்கரை திறந்து கடைந்து விட்டு கொதிக்கவைக்கவும்
- சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுத்தம் பருப்பு ,கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதில் சேர்க்கவும்

Tamil Cooking recipe for Tomato Chutney
தேவையான பொருட்கள்
- தக்காளி - 4
- புளி - 1 கொட்டை பாக்கு அளவு
- மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
- உப்பு-தேவையான அளவு
- எண்ணெய் -தேவையான அளவு
தாளிக்க:
- கடுகு - 1 டீஸ்பூன்
- உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
- பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
செய்முறை :
- தக்காளி,மிளகாய்த்தூள்,புளி ,உப்பு ,அனைத்தும் நன்றாக அரைக்கவும்.
- சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுத்தம் பருப்பு ,பெருங்காயம் , சேர்த்து தாளித்து அதில் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை கிளறவும்.
- எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கிவிடவும் .
தேவையான பொருட்கள்:(4 பேருக்கு)தேங்காய் - 1 மூடி (1/2 தேங்காய்)பச்சைமிளகாய் - 3 சிறிய வெங்காயாம் - 7இஞ்சி - அரை விரல் நீளம்கடுகு - 1/2 தேக்கரண்டிகருவேப்பிலை - 5 இலைகள்எண்ணெய் - தேவைகேற்பஉப்பு - தேவைகேற்பசமைக்கும் முறைகள்:
- தேங்காய், பச்சைமிளகாய், சிறிய வெங்கயாம் - 2, இஞ்சி போன்றவற்றை அம்மியில் வைத்து நேவாக அரைக்கவும்.
- தேவையான அளவிற்கு மேலே அரைத்ததில் தண்ணீரை சேர்க்கவும்.
- அடுப்பில் மிதமான சூடுடன் வாணலியில் எண்ணையை விட்டு கடுகு, கருவேப்பில்லை, வெங்காயம் கொண்டு வதக்கவும்.
- ஒரு நிமிடம் வதக்கியவுடன் மேலே அரைத்ததை கொண்டு தாளிக்கவும்.
- சுவையான காசாங்காடு கிராம தேங்காய் சட்னி தயார்.
தேவையான பொருட்கள்:
(2 - பேருக்கு)இன்ஜி - 1/2 விரல் நீளம்பூண்டு - 1 பல்லுபச்சைமிளகாய் - 2சின்ன வெங்காயம் - 2கொத்தமல்லி தழை - 1 கட்டுபுளி - 1துருவிய தேங்காய் - 3 மேசைகரண்டிகருவேப்பில்லை - 5 இலைகள்கடுகு - 1/2 தேக்கரண்டிசமையல்எண்ணெய் - 1 தேக்கரண்டிஉப்பு - தேவையான அளவுசமைக்கும் முறைகள்:
- வாணலியை அடுப்பில் வைக்கவும்.
- எண்ணையை வானலியில் விட்டு சிறிது சூடாகியுடன், இன்ஜி, பூண்டு, பச்சைமிளகாய், சின்ன வெங்காயம் வதக்கவும்.
- இதோடு கொத்தமல்லியை சேர்த்து வதக்கவும்.
- இதோடு துருவிய தேங்காயை சேர்த்து வதக்கும்.
- ஒரு நிமிடம் வதக்கியவுடன் ஆற வைக்கவும்.
- ஆறிய இந்த கலவையை புளியுடன் தேவைக்கற்றவாறு தண்ணீர் சேர்த்து மின் அம்மியில் (Mixie) நேவாக அரைக்கவும்.
- வாணலியில் ஒரு மேசைகரண்டி அளவாக எண்ணையை ஊற்றி சிறிது நேரம் சூடாகியவுடன், கடுகை போடவும்.
- கடுகு வெடிக்கும் சத்தம் கேட்டவுடன் கருவேபில்லையை சேர்த்து தாளிக்கவும்.
- இதோடு அம்மியில் அரைத்த கலைவை சேர்த்து ஒருமுறை கொத்திக்க விடவும்.
- ருசியுள்ள கொத்தமல்லி சட்னி தயார்.
முள்ளங்கி சட்னி
நான்கு பெரிய முள்ளங்கியை தோல் சீவி, துண்டுகளாக நறுக்கவும். அதனுடன் நெல்லிக்காய் அளவு புளி, சிறிய கட்டி வெல்லம், தேவையான அளவு காய்ந்த மிளகாய் மற்றும் உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு அரைக்கவும். கடாயில், ஒரு கரண்டி நல்லெண்ணெய் விட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அரைத்து வைத்துள்ள முள்ளங்கியை அதில் சேர்த்து, நீர் சுண்டும் வரை வதக்கவும். நிறைவாக, அரை டீஸ்பூன் வெந்தயப்பொடி போட்டு இறக்கவும்.
சப்பாத்தி மற்றும் தோசைக்கு இது சூப்பர் சைட் டிஷ்.
கமென்ட்: இதனுடன் கொத்தமல்லி, கறிவேப்பிலையையும் சேர்த்து வதக்கி அரைத்தால்... கூடுதல் மணம் மற்றும் ருசி நிச்சயம்.'
-pettagum-
மாங்காய்ச் சட்டினி
தேவைப்படுபவை:
தோல் சீவப்பட்ட மாங்காயின் துருவல் - ஒரு கிண்ணம்
தேங்காய்த் துருவல் - ஒரு கிண்ணம்
மிளகாய் வற்றல் - 8 அல்ல்து 10
பெருங்காயப் பொடி - 1 தே. க.
உப்பு - 2 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
இவற்றைத் தண்ணீர் சேர்க்காமல் மின் அம்மியில் மசித்துக் கடுகு மட்டும் தாளிக்கவும்.
கடலைப்பருப்பு-தேங்காய்ச் சட்டினி
தேவைப்படும் பொருள்களும் முன்ன்ம் சொன்ன அதே அளவுகளின் படியே. ஆனால், கடலைப் பருப்பு, உடைத்த கடலையைக் காட்டிலும் திடமானதால் மேலும் ஒன்றிரண்டு பச்சை மிளகாய்களையோ அல்லது மிளகாய் வற்றல்களையோ அத்துடன் சேர்த்து அரைக்க வேண்டும். புளி அல்லது அலுமிச்சம்பழச் சாறு சேர்ப்பதெல்லாமும் கூட முன் சொன்ன சட்டினிகளைப் போலவே தான். எனினும் கடலைப் பருப்பு-தேங்காய்ச் சட்டினி பிற சட்டினிகளைக் காட்டிலும் சற்றே அதிக நேரத்துக்குக் கெடாமல் இருக்கும்.