BREAKING NEWS

Category 5

Category 6

Category 7

From our Blog

Friday, November 29, 2013

பாகற்காய் சூப்

பாகற்காய் சூப்



தேவையான பொருட்கள்... 

பெரிய பாகற்காய் - 1 
எலுமிச்சம்பழம் - பாதி 
காய்ச்சிய பால் - 1/2 கப் 
எண்ணெய்‍ - 1 தேக்க‌ர‌ண்டி 
பெரிய வெங்காயம் - 1 
தக்காளி - 1 
பச்சை மிளகாய் - 1 
மிளகு தூள் - 1 ஸ்பூன் 

தாளிக்க...

சோம்பு - 1/4 தேக்க‌ர‌ண்டி 
உளுத்தம்பருப்பு - 1/2 தேக்க‌ர‌ண்டி 
பட்டை - 1 
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது 
உப்பு - தேவையான அளவு 

செய்முறை.... 

• பாகற்காயை பொடியாக நறுக்கி தண்ணீரில் அலசி சிறிது மஞ்சள் பொடி சேர்த்து குக்கரில் 2 விசில் விட்டு வேக விட வேண்டும். 

• வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சோம்பு, உளுத்தம் பருப்பு, பட்டை, கறிவேப்பிலை போட்டு தாளிக்க வேண்டும். அத்துடன் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். இத்துடன் வெந்த பாகற்காய் போட்டு கிளறி தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து ஒரு விசில் விட்டு இறக்க வேண்டும். 

• அதனுடன் உப்பு, மிளகு தூள் சேர்த்து, எலுமிச்சம்பழம் பிழிய வேண்டும். 

• கடைசியாக பால் சேர்த்து கொத்துமல்லி தூவி பரிமாற வேண்டும்.

மாலை மலர்..

Thursday, November 28, 2013

சுவையான... சில்லி சப்பாத்தி

சுவையான... சில்லி சப்பாத்தி


இரவில் சப்பாத்தி சுட்டதில், மிஞ்சிய சப்பாத்திகளை தூக்கிப் போடாமல், அவற்றை வைத்து காலையில் ஒரு சூப்பர் டிபனான சில்லி சப்பாத்தி செய்யலாம். அதுவும் இந்த டிபனை குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவர். இப்போது அந்த சில்லி சப்பாத்தியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

சப்பாத்தி - 2
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 1
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
சில்லி சாஸ் - 1/2 டேபிள் ஸ்பூன்
தக்காளி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் சப்பாத்தியை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின் பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய வெங்காயம், தக்காளியைப் போட்டு நன்கு வதக்கவும். பின் சிறிது உப்பு மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து வதக்க வேண்டும்

பின் அதில் மிளகாய் தூள், சில்லி சாஸ், தக்காளி சாஸ் மற்றும் சோயா சாஸ் விட்டு கிளற வேண்டும். பிறகு அதில் நறுக்கி வைத்துள்ள சப்பாத்தி துண்டுகளைப் போட்டு நன்கு கிளறி இறக்கி விடவும்.

இப்போது சுவையான சில்லி சப்பாத்தி ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லியைத் தூவி பரிமாறவும்.

குறிப்பு: விருப்பமுள்ளவர்கள் இதனுடன் குடை மிளகாய், கேரட் போன்ற காய்கறிகளை சேர்த்து சில்லி சப்பாத்தியை செய்யலாம்.

சுவையான சுவையான... சில்லி சப்பாத்தி ரெடி..
நன்றி:தளம்

பீட்ரூட் கேசரி / Beetroot Kesari



பீட்ரூட்டினை பல வகைககளில் நாம் சமைத்து சாப்பிடலாம். நார்மலாக நாம் செய்யும் ரவா கேசரியில் பீட்ரூட் சாறும் , துருவிய பீட்ரூட்டும் சேர்த்து இதில் செய்துள்ளேன்.
பீட்ரூட்டில் நிறைய உணவுச் சத்துகள் உண்டு. விட்டமின் சி, பொட்டாசியம், ஃபோலாசின், பீட்டா கரோட்டின், மாவுச்சத்து, இரும்புச் சத்து இதில் அதிகம் . வாரம்ஒரு முறை அல்லது இரண்டு முறை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். (தினமும் சாப்பிடுவோம் என்று அடம்பிடிப்பவர்கள் தினமும் சேர்த்துக்கொள்ளலாம்)
:-
தேவையான பொருட்கள் :
ரவை - 1கப்
சீனி - 1கப்
தண்ணீர் - 2கப்
துருவிய பீட்ரூட் - 1/4 கப்
பீட்ரூட் சாறு - 1/4கப்
நெய் - 3 - 5ஸ்பூன் முந்திரி - 10
ஏலக்காய் பொடி - 1/2ஸ்பூன்
* சின்ன பீட்ரூட் ஒன்றினை எடுத்து அதனை சின்ன துருவலில் துருவிக் கொள்ளவும்.
* துருவிய பீட்ரூட்டினை கைகலால் பிழிந்து சாறு எடுத்து தனியாக வைக்கவும்.
* கடாயில் 3ஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்த பின்பு முந்திரி போட்டு வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
:-
* அதே கடாயில் ரவையினை வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
* கடாயில் 2 கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதி வரும் பொழுது மெல்ல வறுத்த ரவையினை சேர்க்கவும். கட்டி விழாமல் கரண்டி வைத்து கலக்கவும்.
* கொஞ்சம் ரவை திக்கானவுடன், சீனி, துருவிய பீட்ரூட், பீட்ரூட் சாறு சேர்த்து மீண்டும் கட்டி விழாமல் கிண்டி விடவும்.
:
* கடைசியாக 2 ஸ்பூன் நெய்,ஏலக்காய் பொடி, முந்திரி சேர்த்து கிண்டி அடுப்பினை அணைக்கவும்.
* தட்டில் நெய் தடவி அதில் கேசரியினை பரப்பி வைக்கவும். 15 நிமிடங்கள் கழித்து விரும்பிய வடிவில் கட் பண்ணி பரிமாறவும்.
:-
பீட்ரூட்டில் இருக்கும் முக்கியமான தன்மை இதில் கொழுப்புச் சத்து கிடையாது. இதை ஒரு காலத்தில் ஐரோப்பாவில் புற்றுநோய்த் தடுப்பாக பயன்படுத்தினார்கள். இதன் சிவப்பு வண்ணத்தில் (பீட்டா கரோட்டின்) புற்றுநோய் தடுப்புத் தன்மை சேர்ந்திருப்பதால் புற்றுநோயுடன் போராடும் சக்தி உள்ளது. மேலும் பீட்ரூட் நமது உடலின் ஆக்ஸிஜன் உறிஞ்சும் சக்தியை அதிகரிக்கிறது. இதே சிவப்பு நிறத்தில் ஃபோலாசின், பீட்டா கரோட்டின் இருப்பதால், பெண்களின் உடல்நலத்துக்குமிகச் சிறந்தது. முக்கியமாக கருத்தரிக்கும் பெண்களுக்கு தேவையான சத்துகள் நிறைய இருக்கின்றன.
:-
நன்றி என் இனிய இல்லம் முகநூல்

Wednesday, November 27, 2013

சுவாரஸ்யமான கிச்சன் டிப்ஸ்


1. வாழைப்பழங்கள் வெளிபடுத்தும் வாயுக்கள் பிற பழங்களை விரைவாக பழுக்கவைத்துவிடும், ஆதலால் வாழைப்பழங்களை தனியே வைப்பது உகந்தது.
:-
2. உப்பு பாத்திரத்தில் ஈரம் சேர்ந்துவிட்டால் அதில் சிறிதளவு அரிசியை போட்டுவிடவும், கட்டி கட்டிகளாக இருக்கும் உப்பு முன்பிருந்த மாதிரி மாறிவிடும்.
:-
3. ஆமலேட் செய்ய முட்டையை அடிக்கும்போது அதோடு சிறிதளவு பால் அல்லது சோள மாவு சேர்த்தால் ஆமலேட் பெரியதாகவும், மிருதுவாகவும், சுவை மிகுந்ததாகவும் இருக்கும்.
:-
4. கொத்தமல்லி மற்றும் புதினா நீண்ட காலத்திற்கு வாடாமல் இருக்க, அவற்றை அலுமினியம் ப்ஹாயிலில் ( Aluminium Foi l) சுற்றி குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.
:-
5. எலுமிச்சம் பழம் மிக கடினமாக மாறிவிட்டால், அவற்றை பிழிவதற்கு 15 நிமிடங்களுக்கு முன் வெதுவெதுப்பான நீரில் போட்டுவிடவும், இவ்வாறு செய்தால் எலுமிச்சம் பழம் புதிதுபோல் ஆகிவிடும்.
:-
நன்றி வெப்துனியா

Tuesday, November 26, 2013

புதினா பன்னீர் புலாவ்




தேவையான பொருட்கள்: 
பாசுமதி அரிசி - 2 கப் 
பன்னீர் - 200 கிராம் (சிறிதாக நறுக்கியது) 
புதினா - 1 கட்டு 
வெங்காயம் - 2 (நறுக்கியது) 
பச்சை மிளகாய் - 3 
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
கிராம்பு - 4 
பட்டை - 1 இன்ச் 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு 
தண்ணீர் - 4 கப் 

செய்முறை: 

முதலில் அரிசியை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 

பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் கழுவிய அரிசியைப் போட்டு, 4 கப் தண்ணீர் ஊற்றி, 10 நிமிடம் கொதிக்க விட்டு, சாதமாக வந்த பின் இறக்கி விட வேண்டும். 

பின்பு அதில் உள்ள அதிகப்படியான நீரை வடித்துவிட்டு, சாதத்தை லேசாக குளிர வைக்க வேண்டும். 

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கி வைத்துள்ள பன்னீர் துண்டுகளை 2-3 நிமிடம் வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 

அதே சமயத்தில் புதினாவை கழுவி, மிக்ஸியில் போட்டு, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின் அதே வாணலியில் சிறிது எண்ணெய் சேர்த்து காய்ந்ததும், பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து, பொன்னிறமாக வதக்கி, அரைத்து வைத்துள்ள பேஸ்ட் மற்றும் உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும். 

இறுதியில் வறுத்து வைத்துள்ள பன்னீர் துண்டுகள் மற்றும் வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து, மீண்டும் 2-3 நிமிடம் பிரட்டி, இறக்கி விட வேண்டும்.

இப்போது சுவையான புதினா பன்னீர் புலாவ் ரெடி!!!

Read more at: http://tamil.boldsky.com/recipes/veg/mint-paneer-pulao-easy-rice-recipe-003235.html

Monday, November 25, 2013

சிக்கன் பூனா


தேவையான பொருட்கள்: 

சிக்கன் - 2 கிலோ (பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்) 
பூண்டு - 12 பற்கள் 
வரமிளகாய் - 10 
கிராம்பு - 4 
பச்சை ஏலக்காய் - 4
பட்டை - 2 சீரகம் - 1 டீஸ்பூன்
தயிர் - 1/2 கப் 
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு 
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது) 
செய்முறை: 

முதலில் பூண்டு, வரமிளகாய், கிராம்பு, ஏலக்காய், பட்டை மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். 

பின்னர் சிக்கனை நன்கு கழுவி, அதில் உள்ள ஈரத்தை பேப்பர் டவல் கொண்டு முற்றிலும் எடுத்துவிட வேண்டும். 

பின்பு சிக்கன் துண்டுகளின் மேல் எண்ணெய் தடவி, அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை தேய்த்து, 2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். 

பிறகு ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஊற வைத்துள்ள சிக்கன் துண்டை போட்டு, தீயை குறைவில் வைத்து, 8-10 நிமிடம் பொன்னிறமாக வறுத்து, தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். 

பின் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 3 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சீரகம் சேர்த்து தாளித்து, வறுத்த சிக்கன் துண்டை சேர்த்து, உப்பு, தயிர் மற்றும் 1/ கப் தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி விட்டு, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கி விட வேண்டும். 

விசில் போனதும், அதனை திறந்து குளிர வைத்து, அதனை மற்றொரு வாணலியில் ஊற்றி, 5 நிமிடம் சிக்கன் கொதிக்க விட்டு இறக்க வேண்டும். 

இப்போது சுவையான சிக்கன் பூனா ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லியைத் தூவி அலங்கரித்து, சப்பாத்தி அல்லது சாதத்துடன் பரிமாற வேண்டும்.

Read more at: http://tamil.boldsky.com/recipes/non-veg/easy-recipe-chicken-bhuna-003184.html

நட்ஸ் மில்க் ஷேக்



தேவையான பொருட்கள்: 
பால் - 1 டம்ளர் (கொதிக்க வைத்து, குளிர வைத்தது)
பாதாம் - 8-10 
பிஸ்தா - 7-8 
பேரிச்சம் பழம் - 2 (விதையில்லாதது)
வால் நட் - 2 
ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
சர்க்கரை - தேவையான அளவு 
சாக்லெட் சாஸ் - சிறிது 
செய்முறை: 
முதலில் மிக்ஸியில் பாதாம், பிஸ்தா, பேரிச்சம் பழம் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும். 

பின்னர் பாலில் 2 டேபிள் ஸ்பூன் அரைத்து வைத்துள்ள பொடியை போட்டு, மிக்ஸியிலோ அல்லது பிளெண்டரிலோ ஊற்றி அடித்து, டம்ளரில் ஊற்றி, அதன் மேல் சாக்லெட் சாஸ் ஊற்றி பரிமாறினால், சூப்பரான சுவையில் நட்ஸ் மில்க் ஷேக் ரெடி!!!
 
Copyright © 2013 சமையல் குறிப்புக்கள்
Shared by WpCoderX