BREAKING NEWS

Category 5

Category 6

Category 7

From our Blog

Friday, August 30, 2013

கேரட் ஜூஸ்

Carrot Juice - Cooking Recipes in Tamil
கேரட் ஜூஸ் நல்ல ஒரு எனர்ஜி பானம். கேரட்டை சமைச்சு சாப்பிடுவதை விட இந்தமாதிரி ஜூஸாக சாப்பிடுவது உடம்புக்கு ரொம்ப நல்லது. கேரட் சாப்பிடாத குழந்தைங்ககூட இந்த ஜூஸை ரசித்து ருசித்து விரும்பி சாப்பிடுவார்கள்.....

தேவையான பொருட்கள்:
கேரட் - ஒன்று
பால் - ஒரு டம்ளர்
தண்ணீர் - ஒரு டம்ளர்
சர்க்கரை - ஒரு டேபிள் ஸ்பூன் (அ) தேன்
செய்முறை:
கேரட்டை தோலை நீக்கி பூந்துருவலாக துருவவும்.
துருவலை மிக்சியில் போட்டு பால் பாதி தண்ணீர் ஊற்றி சர்க்கரை சேர்த்து நன்கு அரைக்கவும்.
அரைத்ததை வடிக்கவும், மறுபடி மிக்சியில் போட்டு மீதி தண்ணீரை ஊற்றி அரைத்து வடிக்கவும்.
டம்ளரில் ஊற்றி கொடுக்கவும்.
குறிப்பு:
குழந்தைகளுக்கு இதை ஆறு மாதத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்து பழக்கவும்.
முதலில் வெரும் ஆறிய வெண்ணீரில் செய்து கொடுக்கவும்.
இதனுடன் ஆப்பிள் ஒரு துண்டு சேர்த்து அரைத்தால் நல்ல சுவையாக இருக்கும்.
பிறகு எந்த பார்முலா மில்க் ஆரம்பிக்கிறீர்களோ அதில் கொடுக்கவும்.
பெரிய குழந்தைகள் என்றால் ஐஸ் கியுப்ஸ் போட்டு கொடுக்கலாம்.
கண்பார்வை கோளாறு உள்ளவர்கள் தினம் அருந்தலாம்.
கர்ப்பிணி பெண்கள் தினமும் இதை குடிக்கலாம். குழந்தைக்கு நல்ல கலர் கிடைக்கும்.
முகத்தில் அரைத்தும் தேய்க்கலாம். முகம் பள பளக்கும்.
-koodal.com-

பூசணிக்காய் தயிர்அவல்

White Pumpkin Curd Poha - Cooking Recipes in Tamil
தற்போது வெயிலின் தாக்கம் தாங்க முடியவில்லை. இந்தநேரத்தில் இயற்கை உணவுகளை கூலாக சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமும் அதிகரிக்கும். வெயில் கொடுமையால் ஏற்படும் நோய்களில் இருந்தும் தப்பிக்கலாம். அதற்காக சில இயற்கை உணவுகள் இதோ....
தேவையான பொருட்கள்:
பூசணிக்காய் - 1
அவல் - 1 கிலோ
தயிர் - 4 லிட்டர்
நறுக்கிய குடைமிளகாய் - 100 கிராம்
நறுக்கிய கொத்தமல்லி - 1 கப்
உப்பு, மிளகு - தேவையான அளவு
செய்முறை:
* பூசணிக்காயை விதைகள் நீக்கி சாறு பிழிந்து கொள்ளவும்.
* அந்த சாறுடன் எல்லா பொருட்களையும் சேர்த்து கலக்கவும்.
* பூசணிக்காய் தயிர்அவல் ரெடி!
* விதை இல்லாத பச்சை திராட்சை, மாதுளம்பழம் இருந்தால் சேர்த்துக்கொள்ளலாம்.
குறிப்பு: உங்கள் தேவைக்கு ஏற்ப தேவையான பொருட்களின் அளவை மாற்றியமைத்துக் கொள்ளவும்.
-koodal.com-

கேரட் சாலட்

Carrot Salad - Cooking Recipes in Tamil
தற்போது வெயிலின் தாக்கம் தாங்க முடியவில்லை. இந்தநேரத்தில் இயற்கை உணவுகளை கூலாக சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமும் அதிகரிக்கும். வெயில் கொடுமையால் ஏற்படும் நோய்களில் இருந்தும் தப்பிக்கலாம். அதற்காக சில இயற்கை உணவுகள் இதோ....
தேவையான பொருட்கள்:
துருவிய கேரட் - 1 கிலோ
முளைக்கட்டிய பச்சைப்பயறு - 1/4 கிலோ
தேங்காய்த் துருவல் - 1 கப்
எலுமிச்சம்பழம் - 1
நறுக்கிய குடை மிளகாய் - 50 கிராம்
நறுக்கிய கொத்தமல்லி - ஒரு கட்டு
உப்பு, மிளகுப்பொடி - தேவைக்கு ஏற்ப
செய்முறை:
* திருகிய கேரட், முளைகட்டிய பச்சைப்பயறு, தேங்காய்த் துருவல், நறுக்கிய குடை மிளகாய், கொத்தமல்லி இவற்றை ஒன்றாக சேர்த்து கலக்கவும்.
* அதன் மீது எலுமிச்சம்பழத்தை சாறு பிழிந்து சேர்த்து, உப்பு, மிளகுப்பொடி கலந்து மீண்டும் கலக்கவும்.
* ஆரோக்கிய குளிர்ச்சியான உணவு ரெடி!
-koodal.com-

தர்பூசணி ஜூஸ்

தர்பூசணி ஜூஸ்
Watermelon Juice - Cooking Recipes in Tamil
கோடையில் குளு குளுன்னு இருக்க தர்பூசணி சாப்பிடுங்க.. தாகத்தை தீர்க்கும் தர்பூசணி உடலுக்கு ரொம்ப நல்லது. ரொம்ப பசியா உள்ளவர்கள் தர்பூசணி நாலு துண்டு சாப்பிட்டாலும் வயிறு திம்முனு இருக்கும், பசியே எடுக்காது....

தேவையான பொருட்கள்:

தர்பூசணி துண்டுகள் - 4
சர்க்கரை (அ) தேன் - சிறிது
மிளகு தூள் - ஒரு சிட்டிகை
சுக்கு தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - அரை சிட்டிகை
ஐஸ் கியுப்ஸ் - 6

செய்முறை:

நான்கு துண்டு தர்பூசணி எடுத்து கொள்ளவும்.

பழத்தை கழுவி, அதில் உள்ள கொட்டைகளை நீக்கி விட்டு, துண்டுகளாக அரியவும்.

மிக்சியில் ஐஸ் கியுப்ஸ், சர்க்கரை, உப்பு, மிளகு தூள், சுக்கு தூள் பழம் அனைத்தையும் போட்டு நன்கு அடித்து பெரிய துளையுள்ள வடிகட்டியில் வடித்து குடிக்கவும்.

அப்படி வடிகட்ட முடியவில்லை என்றால், மிக்சியில் அடித்ததை ஒரு பாத்திரத்தில் ஊற்றிவைத்தால் அடியில் கொட்டைகள் தங்கிடும், மிகவும் கலக்காமல் அப்படியே தெளிந்த மாதிரி டம்ளரில் ஊற்றி பருகவும்.

ஆஹா! என்ன.. ஒரு புத்துணர்வு. கண்ணெல்லாம் குளிர்ந்து விடும்.

குறிப்பு:

தர்பூசணி நல்ல ஒரு நீராகாரம், தாகத்தை தணிக்கும்.

இனிப்பில்லாத தர்பூசணி பழத்தை சின்னதா கட் செய்து அதில் சர்க்கரை சேர்த்து குளிர வைத்து குடித்தாலும் நல்லா இருக்கும்.

இதில் பால் சேர்த்தும் ஜூஸ் தயாரிக்கலாம் பால் சேர்க்கும் போது வெரும் ஐஸ் கட்டி, சர்க்கரை மட்டும் போதும். மாதுளை சேர்த்தும் செய்து குடிக்கலாம்.

இதன் தோலை வீணாக்காமல் சாம்பார் வைக்கலாம். தர்பூஸ் வெட்டிய முழுவதையும் தோலிலிருந்து வெட்டி எடுக்க முடியாது அதற்கு ஒரு மேஜை கரண்டி கொண்டு வழித்தெடுத்தால் ஈசியாக வந்துவிடும்.

தர்பூசணியை கட் செய்து பிரிட்ஜில் வைத்தால் தண்ணீர் அதிகமாக விடும், அது கெட்டியாக கிரிப்பாக இருக்க அரிந்ததும் பீரிஜரில் சிறிது நேரம் வைத்து எடுத்தால் தண்ணீர் விடாமல் கிரிப்பாக இருக்கும்.

Wednesday, August 21, 2013

கொத்தமல்லி சப்பாத்தி

காலையில் எளிமையான முறையில் வித்தியாசமான மற்றும் ஆரோக்கியத்தை தரும் வகையில் ஒரு சப்பாத்தி செய்ய நினைத்தால், அதற்கு கொத்தமல்லி சப்பாத்தி சரியானதாக இருக்கும். அந்த கொத்தமல்லி சப்பாத்தியை செய்வது மிகவும் ஈஸியானது. மேலும் இந்த சப்பாத்திக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் வீட்டு சமையலறையில் இருப்பவையே.
இப்போது அந்த கொத்தமல்லி சப்பாத்தியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!





தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 2 கப்
கொத்தமல்லி - 3 கப் (நறுக்கியது)
சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
கடலை மாவு - 3 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பௌலில் கோதுமை மாவு, உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை ஈரத் துணியால் மூடி, சிறிது நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு பௌலில் கொத்தமல்லி, சீரகம், மஞ்சள் தூள், கடலை மாவு, பச்சை மிளகாய் ஆகியவற்றைப் போட்டு, நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பிறகு சப்பாத்தி மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, அதனை சப்பாத்தி போன்று தேய்த்து, நடுவே சிறிது கொத்தமல்லி கலவையை வைத்து மூடி, மீண்டும் சப்பாத்தி போன்று தேய்த்துக் கொள்ள வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் தேய்த்துக் கொள்ள வேண்டும்.
இறுதியில் ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், தேய்த்து வைத்துள்ள சப்பாத்திகளை ஒவ்வொன்றாக போட்டு எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் வேக வைத்து எடுக்க வேண்டும்.
இப்போது சூப்பரான கொத்தமல்லி சப்பாத்தி ரெடி!!! இதனை பன்னீர் மசாலாவுடன் சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

tamil.boldsky

Tuesday, August 13, 2013

சாம்பார் பொடி


தனியா ஒரு கப்
காய்ந்த மிளகாய் 2 கப்
சீரகம் அரை ஸ்பூன்
மிளகு அரை ஸ்பூன்
பெருங்காயம் கால் ஸ்பூன்
பச்சரிசி அரை ஸ்பூன்
வெந்தயம் அரை ஸ்பூன்
கடலைபருப்பு -1 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு -1 ஸ்பூன்
கருவேப்பிலை 10 இலைகள்



எல்லாவற்றையும் தனித்தனியாக லேசாக சிவக்கும்படி வறுத்துக் கொள்ளவும்.கருவேப்பிலை நல்ல மொறுமொறுப்பாக வேண்டும்.கடைசியில் பெருங்காயத்தை வறுக்க வேண்டும்.வறுத்துக் கொட்டி ஆறியவுடன் அரைத்தால் நன்றாக அரைபடும்.பொருட்களை நல்ல வெய்யிலில் காய வைத்து பின் வறுக்க வேண்டும். வெய்யில் அல்லாத காலங்களில் மைக்ரோவேவ் அவனில் சூடுபடுத்தி பின் வறுக்கலாம்.அரைத்தபின் காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்து உபயோகப்படுத்தலாம்.

கீமா சப்பாத்தி

மட்டன் கீமா - 500 கிராம்
தயிர் - 1/2 கப்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன் 
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு 
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் 
சீரகப் பொடி - 1 டீஸ்பூன் 
மல்லி தூள் - 2 டீஸ்பூன் 
கரம் மசாலா - 1 டீஸ்பூன் 
தண்ணீர் - 1/2 கப்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

சப்பாத்திக்கு...
=========
கோதுமை மாவு - 2 கப்
உப்பு - தேவையான அளவு
வெதுவெதுப்பான நீர் - 1 கப்
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

முதலில் கீமாவை நன்கு கழுவி, அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, தயிர், மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்தது, அரை மணிநேரம் ஊற வைக்க வேண்டும். அரை மணிநேரம் ஆன பின்னர், ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து 4-5 நிமிடம் தீயை குறைவில் வைத்து வதக்க வேண்டும். பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய், சீரகப் பொடி, மல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு 5 நிமிடம் கிளறி விட வேண்டும். அடுத்து ஊற வைத்துள்ள மட்டனை சேர்த்து, 10 நிமிடம் தொடர்ந்து வதக்கி விட வேண்டும். பிறகு கரம் மசாலா மற்றும் தண்ணீர் சேர்த்து, 20 நிமிடம் தீயை குறைவில் வைத்து, தண்ணீர் வற்றும் வரை மட்டனை வேக வைத்து இறக்கி, குளிர வைக்க வேண்டும். பின், ஒரு பௌலில் கோதுமை மாவை போட்டு, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, நன்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும். பின்பு அதனை சிறு உருண்டைகளாக்கி, சப்பாத்தி போன்று சிறு வட்டமாக தேய்த்து, நடுவே ஒரு டேபிள் ஸ்பூன் கீமாவை வைத்து, நான்கு புறமும் மூடி, மீண்டும் லேசாக கீமா வெளியே வராதவாறு தேய்த்துக் கொள்ள வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் தயார் செய்து கொள்ள வேண்டும். இறுதியில் ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் ஒவ்வொரு சப்பாத்திகளாக போட்டு, எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான கீமா சப்பாத்தி ரெடி!!!


நன்றி:tamil.boldsky.com
 
Copyright © 2013 சமையல் குறிப்புக்கள்
Shared by WpCoderX