BREAKING NEWS

Category 5

Category 6

Category 7

From our Blog

Saturday, November 23, 2013

ஜிகர்தண்டா செய்வது எப்படி?

ஜிகர்தண்டா கோடைக்கு ஏற்ற குழந்தைகளுக்கு விருப்பமான, உடலுக்கு மிகவும் குளிர்ச்சியானது.

தேவையான பொருட்கள் :கடல் பாசி - சிறிது 
(அ) 
பாதான் பிசின் - 1/4 ஸ்பூன்
பால் - 3 கப்
ரோஸ் (அ) நன்னாரி சிரப் - ஒரு ஸ்பூன்
ஐஸ்க்ரீம் - ஒரு ஸ்கூப்
ஃப்ரெஷ் க்ரீம் - ஒரு ஸ்பூன்
நட்ஸ் - சிறிது
சர்க்கரை - தேவையான அளவு

செய்முறை :
முதலில் பாதாம் பிசினைப் பயன்படுத்தி செய்வதாக இருந்தால், பாதாம் பிசினை நன்றாக கழுவி 8 மணி நேரம் நீரில் ஊற வைக்கவும்.

கடல் பாசி கொண்டு செய்வதாக இருந்தால், கடல் பாசியை தண்ணீர் ஊற்றி நன்கு காய்ச்சவும், கொஞ்சம் பதத்திற்கு வரும்போது கிளறி விடவும். 

அப்படி செய்து ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
பிறகு பாலை நன்கு திக்காக காய்ச்சி, அதில் சர்க்கரை சேர்த்து கரைக்கவும். 
சர்க்கரை கரைந்ததும் ஃபிரிட்ஜில் வைக்கவும்.

கடல் பாசி என்றால் , ஒரு கப்பில், ஒரு மேசைக்கரண்டி கடல் பாசியை போட்டு, அதன் மேல் ரோஸ் (அ) நன்னாரி சிரப் ஊற்றி, மேலே ஃப்ரெஷ் க்ரீம் வைக்கவும்.
பின் அதில் அந்த குளிர்ந்த பாலை ஊற்றி, மேலே ஒரு ஸ்கூப் ஐஸ்க்ரீம் போட்டு கொடுக்கவும்.

இதுவே பாதாம் பிசின் என்றால், ஊறியப் பின் அது பார்க்க ஜெல்லி போல் இருக்கும். அந்த பாதாம் பிசின் மேல் நன்னாரி சிரப், குளிர்ந்த பால் ஆகியவற்றை ஊற்றி, மேலே ஒரு ஸ்கூப் ஐஸ்க்ரீம் போட்டு கொடுக்கவும்.

இப்போது சுவையான குளிர்ச்சியான 'ஜில்'...'ஜில்'...ஜிகர்தண்டா ரெடி!!!

கீமா சப்பாத்தி



மட்டன் கீமா - 500 கிராம்
தயிர் - 1/2 கப்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன் 
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு 
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் 
சீரகப் பொடி - 1 டீஸ்பூன் 
மல்லி தூள் - 2 டீஸ்பூன் 
கரம் மசாலா - 1 டீஸ்பூன் 
தண்ணீர் - 1/2 கப்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

சப்பாத்திக்கு...
=========
கோதுமை மாவு - 2 கப்
உப்பு - தேவையான அளவு
வெதுவெதுப்பான நீர் - 1 கப்
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

முதலில் கீமாவை நன்கு கழுவி, அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, தயிர், மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்தது, அரை மணிநேரம் ஊற வைக்க வேண்டும். அரை மணிநேரம் ஆன பின்னர், ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து 4-5 நிமிடம் தீயை குறைவில் வைத்து வதக்க வேண்டும். பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய், சீரகப் பொடி, மல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு 5 நிமிடம் கிளறி விட வேண்டும். அடுத்து ஊற வைத்துள்ள மட்டனை சேர்த்து, 10 நிமிடம் தொடர்ந்து வதக்கி விட வேண்டும். பிறகு கரம் மசாலா மற்றும் தண்ணீர் சேர்த்து, 20 நிமிடம் தீயை குறைவில் வைத்து, தண்ணீர் வற்றும் வரை மட்டனை வேக வைத்து இறக்கி, குளிர வைக்க வேண்டும். பின், ஒரு பௌலில் கோதுமை மாவை போட்டு, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, நன்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும். பின்பு அதனை சிறு உருண்டைகளாக்கி, சப்பாத்தி போன்று சிறு வட்டமாக தேய்த்து, நடுவே ஒரு டேபிள் ஸ்பூன் கீமாவை வைத்து, நான்கு புறமும் மூடி, மீண்டும் லேசாக கீமா வெளியே வராதவாறு தேய்த்துக் கொள்ள வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் தயார் செய்து கொள்ள வேண்டும். இறுதியில் ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் ஒவ்வொரு சப்பாத்திகளாக போட்டு, எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான கீமா சப்பாத்தி ரெடி!!!


நன்றி:tamil.boldsky.com

Friday, November 22, 2013

காளான் சீஸ் பக்கோடா.



தேவையான பொருட்கள்: சீஸ் - 1/3 கப் (துருவியது)
காளான் - 15 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 4 (பொடியாக நறுக்கியது) 
பூண்டு - 4 (தட்டியது) 
கடலை மாவு - 1/3 கப்
சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன் 
பேக்கிங் சோடா - 1/2 டேபிள் ஸ்பூன் 
பிரட் தூள் - 1 கப்
மிளகு - 1/2 டேபிள் ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு 

: முதலில் ஒரு பௌலில் துருவிய சீஸ், பூண்டு, உப்பு, மிளகு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். மற்றொரு பௌலில் கடலை மாவு, சோள மாவு, பேக்கிங் சோடா, உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும். அடுத்து ஒவ்வொரு காளானை எடுத்துக் கொண்டு, அதிலுள்ள தண்டை நீக்கிவிட்டு, அதில் சீஸ் கலவையை வைத்து நிரப்பி, தனியாக தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், காளானை கலந்து வைத்துள்ள மாவில் நனைத்து, பிரட் தூளில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இதேப் போன்று அனைத்து காளானையும் பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சூப்பரான காளான் சீஸ் பக்கோடா ரெடி!!!

நன்றி:tamil.boldsky.com

Thursday, November 21, 2013

கீரைச் சமையல்




கீரையை வேகவிடும்போது சிறிது சர்க்கரையைப் போட்டால் அதன் பசுமை நிறம் மாறாமலிருக்கும்.

கீரையை வேகவிடும்போது பாத்திரத்தை மூடாமல் திறந்தே வைத்திருந்தாலும் அதன் பசுமை நிறம் மாறாது.

மிகக் குறைந்த அளவு எள் சேர்த்து வேக வைத்தாலும் கீரை பசுமையாக இருக்கும்.

ரொட்டி பட்டுரா


தேவையான பொருட்கள்

மைதா - 3 கப் (குவித்து) 

ரொட்டி - 8 ஸ்லைஸ் (Bread) 

புளிப்பான கெட்டித் தயிர் - 1/2 கப் 

பேக்கிங் பெளடர் - 1/2 டீஸ்பூன்(Baking Powder) 

உப்பு - 11/2 டீஸ்பூன் 

எண்ணெய் - தேவையான அளவு. 


செய்முறை


1.மைதா, உப்பு, பேக்கிங் பெளடர் இவற்றை ஒன்றாகக் கலந்து கப்பி இல்லாமல் நன்கு சலிக்கவும். 

2.ப்ரெட் ஸ்லைஸ்களின் முறுகலான மேல்பாகத்தை நீக்கிவிட்டு ஓவ்வொரு ஸ்லைஸையும் தண்ணீரில் தோய்த்து உடனே பிழிந்து விடவும். 

3.பிறகு அவற்றைக் கையால் நன்றாக மசிக்கவும். 

4.இத்துடன் தயிர், மாவு, இவற்றை சேர்த்து கலப்பதற்கு இன்னும் சிறிது தண்ணீர் சேர்த்து மிருதுவான மாவாகப் பிசைந்து கொள்ளவும். 

5.பெரிய உருண்டைகளாகச் செய்து மைதா மாவில் புரட்டி சப்பாத்தி போல் இடவும். 

6.வாணலியில் எண்ணெய் காயவைத்து ஒவ்வொன்றாகப் பொன்னிறமாகப் பொரிக்கவும்.

Wednesday, November 20, 2013

ஜவ்வரிசி உப்புமா

தேவையான பொருட்கள்

மெல்லிய ஜவ்வரிசி - 11/2 கப் 

பாசிப்பருப்பு - 1/2 கப் 

பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1/4 கப் 

பச்சை மிளகாய் - 7 (நீளவாக்கில்) அரியவும் 

தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்வூன் 

எலுமிச்சம்பழம் - 1 

நறுக்கிய கொத்தமல்லித் தழை - 1 டேபிள் ஸ்பூன் 

எலுமிச்சம்பழம் - 1 நறுக்கிய கொத்தமல்லித் தழை - 1 டேபிள் ஸ்பூன் 

பொடி உப்பு - 11/4 டீஸ்பூன் 

எண்ணெய் - 8 டேபிள் ஸ்பூன் 

செய்முறை 
ஜவ்வரிசியை கழுவி நன்றாக வடித்துவிட்டு ஒரு கப் தண்ணீர் விட்டு 8 மணி நேரம் ஊற வைக்கவும்.

பாசிப்பருப்பை தண்ணீரில் வேக வைக்கவும். ஒன்றுக்கொன்று ஒட்டாத மாதிரியாக பக்குவத்தில் ரொம்பக் குழைந்துவிடக் கூடாது. 

வடிதட்டு வைத்து வடித்து விடவும். மிகுதியான தண்ணீரை எடுத்துவி பருப்பு ஆறியதும் கையால பிழிந்து எடுக்கவும். 

1 டேபிள்ஸ்பூன் அரிசி மாவை ஊறிய ஜவ்வரிசியுடன் கலந்து உதிர்த்து விடவும். 

கனமான வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடாக்கி தாளிக்கும் பொருட்களைச் சேர்த்து, மிளகாய், பிறகு வெங்காயம் இவற்றை சேர்க்கவும். 

மிதமான தீயில் பொன்னிறமாக வதக்கவும். உதிர்த்த ஜவ்வரிசியை சேர்த்து, குறைந்த அனலில் கைவிடாமல் கிளறவும். 

தேவைப்பட்டால் கூடுதலாக எண்ணெய் விட்டு ஜவ்வரிசி கண்ணாடிபோல ஆகும் வரை கிளறிக் கொண்டேயிருக்கவும். 

பொடி உப்பையும் வேகவைத்த பருப்பையும் சேர்த்து சிறிது நேரம் கலக்கவும். 

அனலிலிருந்து இறக்கி, எலுமிச்சை சாறு, தேங்காய்த் துருவல், மல்லித்தழை சேர்த்து கலந்து பரிமாறவும்.

Tuesday, November 19, 2013

பழங்கள் சுத்தம் செய்யும் முறை



ரசாயன பூச்சுக்கள் பூசி , பழவகைகள், நீண்ட நாட்கள் பசுமையாக இருப்பது போல் தோற்றமளிக்கும். இவைகளை  முறையாக சுத்தம் செய்யாவிட்டால் நாம் உடலுக்கு கெடுதிதான். பழங்கள் சுத்தம் செய்யும் முறை :
சமயல் அறை சிங், நீர் வெளியேறும் ,துவாரத்தை நன்றாக மூடிவிட்டு ,நீர் நிறப்பி ஒரு கோப்பை வினிகரை கலக்கி ,பழங்களை நிறப்பி 10 நிமிடதிற்கு பிறகு சுத்தம் செய்ய ரசாயன பூச்சு அறவே நீங்கிவிடும். பளபளக்கும் பழங்கள் நீண்ட நாட்கள் வரும்.

ரமணியன் 
 
Copyright © 2013 சமையல் குறிப்புக்கள்
Shared by WpCoderX