BREAKING NEWS

Category 5

Category 6

Category 7

From our Blog

Tuesday, March 25, 2014

தேங்காய் பால் - அன்னாசி ஜூஸ்.

தேங்காய் பால் - அன்னாசி ஜூஸ்

தேவையான பொருட்கள் :

அன்னாசி பழம் - பாதி 
ஐஸ் கட்டிகள் – 5 
தேங்காய் பால் – 1 கப் 
தேன் – ருசிக்கு ஏற்ப 

செய்முறை 

• அன்னாசி பழத்தின் தோல் நீக்கி துண்டுகளாக வெட்டவும். 

• வெட்டிய அன்னாசி பழத்துடன் ஐஸ்கட்டி, தேன், 1 கப் தண்ணீர் சேர்த்து நன்கு மிக்சியில் அடித்து வடிக்கட்டி மீண்டும் மிக்சியில் இட்டு தேங்காய் பால் சேர்த்து நல்ல நுரை பொங்க அடித்து ஜூஸ் டம்ளரில் ஊற்றி குடிக்கவும். 

• சூப்பரான தேங்காய் பால் - அன்னாசி ஜூஸ் ரெடி. 

• அன்னாசி பழம் சூடு என்று குடிக்க பயப்படுபவர்கள் இப்படி தேங்காய் பால் சேர்த்து ஜூஸ் செய்து குடிக்கவும். சளியை கூட கட்டுபடுத்தும்.

Tuesday, December 3, 2013

இளநீர் பாயசம்

இளநீர் பாயசம்

தேவையானவை: பால் - 4 கப், தேங்காய்ப்பால் - ஒரு கப், இளநீர் இளம் வழுக்கை (பொடியாக நறுக்கியது) - ஒரு கப், சர்க்கரை - ஒரு கப்.

செய்முறை: பாலை சர்க்கரை சேர்த்து, 15 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்குங்கள். சற்று ஆறியதும், இளநீர் வழுக்கை, தேங்காய்ப்பால் சேர்த்து குளிரவைத்துப் பரிமாறுங்கள். பிரமாதமான ருசியுடன் இருக்கும் வித்தியாசமான பாயசம் இது.

Monday, December 2, 2013

சௌசௌ பாயசம்

சௌசௌ பாயசம்

தேவையானவை: சௌசௌ - 1, சர்க்கரை - அரை கப், பால் - 2 கப், பொடித்த ஏலக்காய் - அரை டீஸ்பூன், முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் - சிறிதளவு, வெனிலா எஸன்ஸ் - 2 சொட்டு, நெய் சிறிதளவு, ஆப்பிள் க்ரீன் ஃபுட் கலர் பவுடர் - ஒரு சிட்டிகை.

செய்முறை: சௌசௌவை நன்கு கழுவி, தோல் சீவி, துண்டு துண்டாக நறுக்கி நீர் விட்டு குக்கரில் வேகவிடுங்கள். வெந்தவுடன் எடுத்து, மிக்ஸியில் போட்டு மைபோல் அரைத்து, அதனுடன் ஒரு கப் பாலும், சர்க்கரையும் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை நன்கு கொதிக்க வையுங்கள். நன்கு கொதித்தவுடன் மீதி பாலையும் சேருங்கள். கடைசியில் முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ், பொடித்த ஏலம் போட்டு இறக்குங்கள். ஃபுட் கலர் போட்டு கலந்து, வெனிலா எஸன்ஸ் 2 சொட்டு விட்டு இறக்குங்கள்.

சௌசௌவை சாம்பார், கூட்டு செய்தால் சாப்பிடாத குழந்தைகள் கூட, இப்படி பாயசம் செய்து கொடுத்தால் அது என்ன காய் என்று தெரியாமலே விரும்பி அருந்துவார்கள். விரும்பினால் குளிரவைத்தும் கொடுக்கலாம்.

Sunday, December 1, 2013

உருளைக்கிழங்கு பாயசம்

உருளைக்கிழங்கு பாயசம்

தேவையானவை: உருளைக்கிழங்கு - 2, பால் - 3 கப், சர்க்கரை - ஒரு கப், கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை, முந்திரி, கிஸ்மிஸ், நெய் - தலா சிறிதளவு, ஏலக்காய்தூள், குங்குமப்பூ - தலா ஒரு சிட்டிகை.

செய்முறை: உருளைக்கிழங்கை தோலுடன் நன்கு கழுவி, வேகவைத்து தோல் நீக்கி நன்கு மசித்துக்கொள்ளுங்கள். பிறகு அதனுடன் பாலும், சர்க்கரையும் சேர்த்து நன்கு கொதிக்கவிடுங்கள். நன்கு கொதித்தவுடன் சிறிதாக நறுக்கிய முந்திரி, கிஸ்மிஸ் ஆகியவற்றை நெய்யில் வறுத்துப் போடுங்கள். ஏலக்காய் பொடித்ததைப் போட்டு, கேசரி பவுடர் சிறிது சேர்த்து கிளறுங்கள். இதமான சூட்டில் பரிமாறுங்கள்.

ஆரஞ்சு பாயசம்

ஆரஞ்சு பாயசம்தேவையானவை: பால் - 4 கப், நன்கு இனிப்பான ஆரஞ்சுப்பழம் - 3, சர்க்கரை - முக்கால் கப், கண் டென்ஸ்டு மில்க் - அரை கப், ஆரஞ்சு எஸன்ஸ் - சில துளிகள், ஃபுட் கலர் ஆரஞ்சு பவுடர் - ஒரு சிட்டிகை.

செய்முறை: பாலில் சர்க்கரை சேர்த்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை கொதிக்கவிடுங்கள். கலர்ஃபுல்லான இந்த பாயசம் குழந்தைகள் விரும்பி அருந்தக்கூடியது. இதை குளிர வைத்து சாப்பிட்டால் இன்னும் சூப்பராக இருக்கும். பிறகு, ஆரஞ்சு கலர் பவுடரை சிறிது தண்ணீரில் கரைத்து பாலில் சேர்த்து, கண்டென்ஸ்டு மில்க்கையும் சேர்த்து, நன்கு கொதிக்கவிட்டு இறக்குங்கள். ஆறியதும் எஸன்ஸ் சேர்த்துக் குளிரவையுங்கள். ஆரஞ்சுப் பழத்தை தோலுரித்து விதை நீக்கி சிறு துண்டுகளாக்குங்கள். அவற்றைப் பாலில் சேர்த்து, மேலும் குளிரவைத்துப் பரிமாறுங்கள்.

Saturday, November 30, 2013

நிலக்கடலை பாயசம்

நிலக்கடலை பாயசம்

தேவையானவை: நிலக்கடலை - ஒரு கப், வெல்லம் (பொடித்தது) - ஒன்றரை கப், பால் - 4 கப், ஏலக்காய் பொடித்தது - ஒரு சிட்டிகை, நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: நிலக்கடலையை வறுத்து மிக்ஸியில் லேசாக பொடித்துக் கொள்ளுங்கள். பிறகு வெல்லத்தை நீர்விட்டு கரைத்து வடிகட்டி, பொடித்த கடலையுடன் சேர்த்து கொதிக்க வைக்கவேண்டும். அதனுடன் பாலையும் விட்டு ஒரு கொதி வந்தவுடன் இறக்குங்கள். பொடித்த ஏலக்காயையும் நெய்யையும் கலந்து பரிமாறவும்.
பாயசத்துக்கு சுவை கூட்ட சில குறிப்புகள்..

பாயசத்துக்கு பாலை வற்றவிடும்போது, சிறு தீயில் காய்ச்சினால் நன்றாக இருக்கும்.

பாலில் வேகவைக்கக் கூடிய அவல், அரிசி போன்றவற்றையும் தீயைக் குறைத்து வேகவிட, சுவை கூடும்.

பாலை வற்றவிடாமலேயே, பால் சுண்டும்போது வரும் நிறம் (லைட் பிங்க்) தேவை எனில், ஒரு டீஸ்பூன் சர்க்கரையை வெறும் கடாயில் அடுப்பில் வைத்து, குறைந்த தீயில் மெதுவாகக கரையவிடுங்கள். கரைந்ததும் கருகிவிடாமல் பாயசத்தில் சேருங்கள். பாலை சுண்டவைத்த எஃபெக்ட் கிடைக்கும்.

சூடாகப் பரிமாறும் பாயசங்களை விட, குளிரவைத்துப் பரிமாறும் பாயசங்களுக்கு சர்க்கரை சிறிது அதிகம் தேவை. உதாரணமாக, ஒரு கப் போடும் இடத்தில், ஒன்றேகால் கப் போடலாம்.

கண்டென்ஸ்டு மில்க் வாங்கிச் சேர்க்க முடியாதபட்சத்தில், பாலையே இன்னும் சிறிது அதிகமாகச் சேர்த்து, நன்கு வற்றக் காய்ச்சிக் கொண்டால் அதே சுவை கிடைக்கும்.

நேந்திரம் பாயசம்



தேவையானவை:
நேந்திரம் பழம் 2
பொடித்த வெல்லம் 1 1/2 கப்
தேங்காய் பால் 1 கப்
நெய் 1/4 கப்
முந்திரி பருப்பு 10
சுக்குசிறிதளவு
ஏலக்காய் 1 தேக்கரண்டி
நேந்திரம் பழம்

செய்முறை : 
நேந்திரம் பழத்தை உரித்து இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேகவைக்கவேண்டும்.
ஆவியிலிருந்து எடுத்து மிக்சியில் போட்டு விழுது போல அரைத்துக் கொள்ளவும்.
பொடித்த வெல்லத்தை ஒரு கப் தண்ணீருடன் சேர்த்து அடுப்பில் வைத்து வெல்லம் கரைந்தவுடன் வடிகட்டவும்.
வாணலியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி அரைத்த பழ விழுதை நன்கு வதக்கவேண்டும்.
பழம் வதங்கிய பிறகு வெல்ல பாகை ஊற்றி கிளறவேண்டும்.
பழமும்,பாகும் சேர்ந்து நல்ல வாசனை வரும்போது தேங்காய் பாலை ஊற்றவும்.
எல்லாம் சேர்ந்து கொதித்தவுடன் (இரண்டு நிமிடம் கழித்து) இறக்கவும்.
முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து சேர்க்கவும்.
ஏலக்காய் பொடியையும் சுக்கை இடித்தும் சேர்க்கவும்.
நன்றி : http://annaimira.blogspot.com
 
Copyright © 2013 சமையல் குறிப்புக்கள்
Shared by WpCoderX