BREAKING NEWS

Category 5

Category 6

Category 7

Tuesday, December 3, 2013

இளநீர் பாயசம்

இளநீர் பாயசம்

தேவையானவை: பால் - 4 கப், தேங்காய்ப்பால் - ஒரு கப், இளநீர் இளம் வழுக்கை (பொடியாக நறுக்கியது) - ஒரு கப், சர்க்கரை - ஒரு கப்.

செய்முறை: பாலை சர்க்கரை சேர்த்து, 15 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்குங்கள். சற்று ஆறியதும், இளநீர் வழுக்கை, தேங்காய்ப்பால் சேர்த்து குளிரவைத்துப் பரிமாறுங்கள். பிரமாதமான ருசியுடன் இருக்கும் வித்தியாசமான பாயசம் இது.

Monday, December 2, 2013

சௌசௌ பாயசம்

சௌசௌ பாயசம்

தேவையானவை: சௌசௌ - 1, சர்க்கரை - அரை கப், பால் - 2 கப், பொடித்த ஏலக்காய் - அரை டீஸ்பூன், முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் - சிறிதளவு, வெனிலா எஸன்ஸ் - 2 சொட்டு, நெய் சிறிதளவு, ஆப்பிள் க்ரீன் ஃபுட் கலர் பவுடர் - ஒரு சிட்டிகை.

செய்முறை: சௌசௌவை நன்கு கழுவி, தோல் சீவி, துண்டு துண்டாக நறுக்கி நீர் விட்டு குக்கரில் வேகவிடுங்கள். வெந்தவுடன் எடுத்து, மிக்ஸியில் போட்டு மைபோல் அரைத்து, அதனுடன் ஒரு கப் பாலும், சர்க்கரையும் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை நன்கு கொதிக்க வையுங்கள். நன்கு கொதித்தவுடன் மீதி பாலையும் சேருங்கள். கடைசியில் முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ், பொடித்த ஏலம் போட்டு இறக்குங்கள். ஃபுட் கலர் போட்டு கலந்து, வெனிலா எஸன்ஸ் 2 சொட்டு விட்டு இறக்குங்கள்.

சௌசௌவை சாம்பார், கூட்டு செய்தால் சாப்பிடாத குழந்தைகள் கூட, இப்படி பாயசம் செய்து கொடுத்தால் அது என்ன காய் என்று தெரியாமலே விரும்பி அருந்துவார்கள். விரும்பினால் குளிரவைத்தும் கொடுக்கலாம்.

Sunday, December 1, 2013

உருளைக்கிழங்கு பாயசம்

உருளைக்கிழங்கு பாயசம்

தேவையானவை: உருளைக்கிழங்கு - 2, பால் - 3 கப், சர்க்கரை - ஒரு கப், கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை, முந்திரி, கிஸ்மிஸ், நெய் - தலா சிறிதளவு, ஏலக்காய்தூள், குங்குமப்பூ - தலா ஒரு சிட்டிகை.

செய்முறை: உருளைக்கிழங்கை தோலுடன் நன்கு கழுவி, வேகவைத்து தோல் நீக்கி நன்கு மசித்துக்கொள்ளுங்கள். பிறகு அதனுடன் பாலும், சர்க்கரையும் சேர்த்து நன்கு கொதிக்கவிடுங்கள். நன்கு கொதித்தவுடன் சிறிதாக நறுக்கிய முந்திரி, கிஸ்மிஸ் ஆகியவற்றை நெய்யில் வறுத்துப் போடுங்கள். ஏலக்காய் பொடித்ததைப் போட்டு, கேசரி பவுடர் சிறிது சேர்த்து கிளறுங்கள். இதமான சூட்டில் பரிமாறுங்கள்.

ஆரஞ்சு பாயசம்

ஆரஞ்சு பாயசம்தேவையானவை: பால் - 4 கப், நன்கு இனிப்பான ஆரஞ்சுப்பழம் - 3, சர்க்கரை - முக்கால் கப், கண் டென்ஸ்டு மில்க் - அரை கப், ஆரஞ்சு எஸன்ஸ் - சில துளிகள், ஃபுட் கலர் ஆரஞ்சு பவுடர் - ஒரு சிட்டிகை.

செய்முறை: பாலில் சர்க்கரை சேர்த்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை கொதிக்கவிடுங்கள். கலர்ஃபுல்லான இந்த பாயசம் குழந்தைகள் விரும்பி அருந்தக்கூடியது. இதை குளிர வைத்து சாப்பிட்டால் இன்னும் சூப்பராக இருக்கும். பிறகு, ஆரஞ்சு கலர் பவுடரை சிறிது தண்ணீரில் கரைத்து பாலில் சேர்த்து, கண்டென்ஸ்டு மில்க்கையும் சேர்த்து, நன்கு கொதிக்கவிட்டு இறக்குங்கள். ஆறியதும் எஸன்ஸ் சேர்த்துக் குளிரவையுங்கள். ஆரஞ்சுப் பழத்தை தோலுரித்து விதை நீக்கி சிறு துண்டுகளாக்குங்கள். அவற்றைப் பாலில் சேர்த்து, மேலும் குளிரவைத்துப் பரிமாறுங்கள்.
 
Copyright © 2013 சமையல் குறிப்புக்கள்
Shared by WpCoderX