* துவரம் பருப்பை வேக வைக்கும்போதே தேங்காய் துண்டு ஒன்றை நறுக்கிப் போட்டால் பருப்பு சீக்கிரம் வெந்துவிடும். வெண்ணெய்போல குழைவாக இருக்கும்.
* கைகள் புக முடியாத கண்ணாடி பாட்டில்களில் அடியில் காணப்படும் கறைகளை அகற்ற எலுமிச்சம் பழத்தின் சிறு சிறு துண்டுகளைப் போட்டு அதில் பாதிக்கு மேல் தண்ணீர் விட்டு குலுக்கவும்.
* சாம்பார் நன்றாக கொதித்து இறக்கியவுடன் அதில் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெயையும் கறிவேப்பிலையும் போட்டு மூடி வைத்தால் சாம்பார் வாசனையாகவும், ருசியாகவும் இருக்கும்.
* எலுமிச்சை, தேங்காய் சாதங்களில் கொஞ்சம் வறுத்த வேர்க்கடலையை ஒன்றிரண்டாக பொடி செய்து போட்டால் சாதம் மிகவும் ருசியாக இருக்கும்.
* எந்த ரசம் வைத்தாலும், ரசம் கொதிக்கும் நிலையில் அரைப்பிடி புதினா இலைகளை போட்டால் ரசம் மணக்கும்.
(ஆர்.ஜெயலெட்சுமி-தினமணி)
Post a Comment