காலிபிளவர் மஞ்சூரியன்
தேவையானவை:
1. காலிபிளவர்.................... ....1
2. மிளகாய் பொடி...................1 தேக்கரண்டி
3. சீரகம்........................ .............1 /2 தேக்கரண்டி
4. சோம்பு........................ ...........1 /4 தேக்கரண்டி
5. வெங்காயம்..................... ..... 6
6. இஞ்சி .............................. ... 1 /2 இன்ச் அளவு
7. பூண்டு பல்........................... ..6
8. சோள மாவு.......................... .3 தேக்கரண்டி
9. இட்லி மாவு/மைதா ......2 தேக்கரண்டி
10. உப்பு .............................. ........ தேவையான அளவு
செய்முறை:
காலிபிளவரை பெரிய துண்டுகளாக நறுக்கவும். அதனை கொதிக்கும் நீரில் போட்டு
எடுக்கவும். அதில் உள்ள புழுக்கள் செத்து நீரின் அடியில் தங்கி விடும்.
இல்லாவிட்டாலும் பரவாயில்லை. அவை அதிக புரத சத்து உள்ளவை. உடலுக்கு நல்லதே.
சீரகம், சோம்பு வறுத்து அத்துடன் வெங்காயத்தை உரித்து வதக்கி அரைக்கவும்.
இஞ்சி பூண்டை அரைக்கவும். பின் அவற்றின் மேல், மிளகாய்ப் பொடி, அரைத்த
வெங்காயம், சீரகம், இஞ்சி, பூண்டு, சோளமாவு, இட்லி மாவு/மைதா + உப்பு
போட்டு பிசைந்து வைக்கவும். வெந்நீரில் போட்டு எடுத்ததால், இதில் மீண்டும்
நீர் ஊற்ற வேண்டாம்.இதனை குளிர்பதனப் பெட்டியிலும் அரை மணி நேரம்
வைக்கலாம்.
அடுப்பில் வாணலி/கடாயை வைத்து எண்ணெய் விட்டு அதில்
மசாலா தடவிய காலி பிளவரை அதில் போட்டு தீயை மிதமாக வைக்கவும். 5 நிமிடம்
கழித்து, காலிபிளவரைத் திருப்பி போடவும். பிறகும் 5 நிமிடம் கழித்து அவற்றை
திருப்பி விடவும். நன்கு சிவந்ததும் எடுக்கவும்.
காலிபிளவர்
என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். இந்த காலி பிளவர் மஞ்சூரியன் வறுவலை
வெறுமனேயே சாப்பிடலாம். அவ்வளவு கலக்கல் சுவையுடன் இருக்கும்..!
Post a Comment