BREAKING NEWS

Category 5

Category 6

Category 7

Wednesday, June 19, 2013

நெல்லிக்காய் ஊறுகாய்

நெல்லிக்காய் ஊறுகாய்

 
 தேவையான பொருட்கள்

நெல்லிக்காய் ( பெரியது ) - 6

மிளகாய் பொடி - 2 தேக்கரண்டி
கடுகு - 2 தேக்கரண்டி
வெந்தயம் - 2 தேக்கரண்டி
பெருங்காயம் - 1 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி
உப்பு - 1 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 3 தேக்கரண்டி

செய்முறை
பெரிய நெல்லிக்காயை மிக பொடிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும். கடுகு 1 1/2 தேக்கரண்டி, வெந்தயம் 2 தேக்கரண்டி இரண்டையும் தனித்தனியே வெறும் வாணலியில் வறுத்து பொடித்துக் கொள்ள வேண்டும். அதே வாணலியில் எண்ணெய் விட்டு 1/2 தேக்கரண்டி கடுகு பெருங்காயம் போட்டு பொரிந்ததும் வறுத்த பொடி, நெல்லிக்காய் உப்பு, எலுமிச்சை சாறு எல்லாவற்றையும் போட்டு 1/2 நிமிடம் கிளறி இறக்கி விட வேண்டும். எலுமிச்சை சாறு இல்லாமலும் இதனை செய்யலாம்.

Post a Comment

 
Copyright © 2013 சமையல் குறிப்புக்கள்
Shared by WpCoderX