BREAKING NEWS

Category 5

Category 6

Category 7

Wednesday, June 19, 2013

ஓட்ஸ் பொங்கல் செய்முறை



தேவையானப் பொருள்கள்:

ஓட்ஸ் - 2 கப்
பச்சைப் பருப்பு - 3/4 கப்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

நெய் - 2 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் 1 - டீஸ்பூன்
முந்திரி பருப்பு - 10
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
கறிவேப்பிலை - கொஞ்சம்

செய்முறை:

* முதலில் வெறும் வாணலியில் பச்சைப் பருப்பை வாசம் வர வறுத்துக் கொள்ளவும்.

* பிறகு குக்கரில் (அ) ஒரு பாத்திரத்தில் பருப்பு வேகும் அளவு தண்ணீர் ஊற்றி, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.

* பருப்பு முக்கால் பதம் வெந்ததும் அதில் ஒரு பங்கு ஓட்ஸூக்கு இரண்டரை பங்கு தண்ணீ­ர் என 5 கப் தண்­ர் ஊற்றி கொதி நிலை வரும் வரை மூடி வைக்கவும்.

* கொதி வந்ததும் ஓட்ஸைப் போட்டு, தேவையான உப்பும் சேர்த்து நன்றாகக் கிளறிவிட்டு மூடி வைக்கவும்.

* இரண்டும் நன்றாகக் குழைந்து, வேகும் வரை மிதமானத் தீயில் வைத்திருக்கவும்.

* ஒரு வாணலியில் நெய் விட்டு சூடுபடுத்தவும்.

* அதில் மிளகு(ஒன்றிரண்டாகப் பொடித்து), சீரகம், இஞ்சி, முந்திரி, கறிவேப்பிலை தாளித்து பொங்கலில் சேர்த்து கிளறி இறக்கவும்.

* அல்லது தாளித்த பிறகு பொங்கலை வாணலியில் சேர்த்து கிளறி இறக்கவும். இந்த முறையில் செய்யும்பொழுது மிகவும் நன்றாக இருக்கும்.

* இதற்கு தேங்காய் சட்னி, சாம்பார் இவை மிகப் பொருத்தமாக இருக்கும்.

குறிப்பு: சாதாரண பொங்கல் போல் அல்லாமல் ஓட்ஸ் பொங்கல் செய்யும்போது பச்சைப் பருப்பின் அளவைக் கொஞ்சம் கூட்டி செய்தால் நன்றாக இருக்கும்.

Post a Comment

 
Copyright © 2013 சமையல் குறிப்புக்கள்
Shared by WpCoderX