BREAKING NEWS

Category 5

Category 6

Category 7

Saturday, June 22, 2013

பச்சை பட்டாணி குழம்பு காளான் மற்றும்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjuFt4KBlUiuGE5XWojb5cENNBFVcWyQCdbf4aRxrm3Ph5t3DtL1PAXqZyw6Wu5jlVVs9BaFq8d-l3u_grTSVxu2dsmdKgl0LYzPp-bqseG2jW5uWMFYaqPa40vKSp0nlx5I7uo9b9Skig/s400/DSCN3015.JPG
தென்னிந்தியாவில் பல வகையான குழம்புகள் உள்ளன. மதிய வேளையில் சாதத்திற்கு அத்தகைய குழம்புகளை சேர்த்து சாப்பிட்டால் தான் பலருக்கும் வயிறு நிறையும். அந்த வகையில் சூப்பரான அசைவ சுவையில் ஒரு சைவ குழம்பை செய்ய நினைத்தால், அதற்கு காளான் பட்டாணி குழம்பு ஏற்றதாக இருக்கும்.
அந்த காளான் பட்டாணி குழம்பின் செய்முறையைத் தான் கீழே கொடுத்துள்ளோம். அதைப் படித்து வீட்டில் செய்து பாருங்கள்.



தேவையான பொருட்கள்:
காளான் - 250 கிராம்
பச்சை பட்டாணி - 1 கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
துருவிய தேங்காய் - 1/2 கப்
முந்திரி - 7-8
மிளகாய் தூள் - 3/4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 3/4 டீஸ்பூன்
கடுகு - 3/4 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் வேண்டிய அளவு தண்ணீர் ஊற்றி, பச்சை பட்டாணியைப் போட்டு, நன்கு 10-15 நிமிடம் பட்டாணி வேகும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய காளானை சேர்த்து 5-6 நிமிடம் வதக்கி, இறக்க வேண்டும்.
பின்பு மிக்ஸியில் முந்திரி மற்றும் தேங்காய் சேர்த்து, வேண்டிய அளவு தண்ணீர் ஊற்றி, நன்கு நைஸாக பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
அடுத்து நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, நன்கு 2 நிமிடம் வதக்க வேண்டும்.
பின் மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
மசாலாக்களானது நன்கு ஒன்று சேர்ந்ததும், அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி, கலவையும், எண்ணெயும் தனியாக பிரியும் வரை வதக்க வேண்டும்.
பின்பு அரைத்த தேங்காய் கலவையை சேர்த்து, 2-3 நிமிடம் கிளறி, 2 1/2 கப் தண்ணீர் ஊற்றி, பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட வேண்டும்.
இறுதியில் காளான் மற்றும் பட்டாணியை சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு, 5-6 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.
இப்போது சூப்பரான காளான் பச்சை பட்டாணி குழம்பு ரெடி!!! இதன்மேல் கொத்தமல்லி தூவி சிறிது நேரம் மூடி வைத்து, சாதத்துடன் பரிமாறினால், அருமையாக இருக்கும்.

Post a Comment

 
Copyright © 2013 சமையல் குறிப்புக்கள்
Shared by WpCoderX