BREAKING NEWS

Category 5

Category 6

Category 7

Saturday, June 22, 2013

முள்ளங்கி சாம்பார் செய்முறை

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgixRUVQ7rEzrOSUSW_9NEvjlwN5COT5WE-LgGEJXHr6iDRsbu0sWJI_aytbsFah5IIhZkhppBiSDxRQhDrJZ-j0tyFZg6GNgVGyw9JLgmDqvPzA0cXJxX36OiS6aeRyomIXAsCbQJhvQA/s1600/DaikonRadish.jpg
அனைவருக்குமே சாம்பார் என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் சாம்பார் என்று சொன்னால், தமிழ்நாடு தான் ஞாபகத்திற்கு வரும். அந்த வகையில் தமிழ்நாட்டில் செய்யப்படும் சாம்பாரானது மிகவும் அருமையாகவும், மணமிக்கதாகவும் இருக்கும். மேலும் சாம்பாரில் பல வகைகள் உள்ளன. அவை அனைத்துமே விருப்பத்தை பொறுத்ததே.
ஆம், எப்படியெனில் சாம்பார் செய்யும் முறை அனைத்தும் ஒன்று தானே தவிர, அதில் சேர்க்கப்படும் காய்கறிகளைக் கொண்டு, சாம்பாரின் பெயரில் மாற்றங்கள் ஏற்படும். அப்படி வந்த ஒரு சாம்பார் தான் முள்ளங்கி சாம்பார். அந்த முள்ளங்கி சாம்பாரை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!



தேவையான பொருட்கள்:
முள்ளங்கி - 2 கப் (தோலுரித்து, நறுக்கியது)
துவரம் பருப்பு - 1 கப்
புளி சாறு - 1/4 கப்
சாம்பார் பொடி - 2-3 டீஸ்பூன்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் துவரம் பருப்பை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, கழுவிக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கழுவிய துவரம் பருப்பு, 2 கப் தண்ணீர், மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் சேர்த்து மூடி, 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
பருப்பானது குளிர்ந்ததும், அதனை லேசாக கடைந்து கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், முள்ளங்கியை போட்டு வதக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அதே வாணலியில் வேண்டுமெனில் எண்ணெய் சேர்த்து, கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
அடுத்து நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். பின் கடைந்து வைத்துள்ள பருப்பை சேர்த்து, சாம்பார் பொடி சேர்த்து, கொதிக்க விட வேண்டும்.
பின் வதக்கி வைத்துள்ள முள்ளங்கியை அத்துடன் போட்டு, முள்ளங்கியை வேக வைக்க வேண்டும்.
முள்ளங்கியானது நன்கு வெந்ததும், அதில் புளியை ஊற்றி, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை நன்கு கொதிக்க விட வேண்டும்.
சாம்பாரானது நன்கு கொதித்து, பக்குவத்திற்கு வந்ததும், அடுப்பை அணைத்து, அதனை இறக்கி அதன் மேல் கொத்தமல்லியை தூவி அலங்கரித்து, சிறிது நேரம் மூடி வைத்து, பின் சாதத்துடன் பரிமாற வேண்டும்

Post a Comment

 
Copyright © 2013 சமையல் குறிப்புக்கள்
Shared by WpCoderX