பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியோடு வரும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான முறையில் ஏதேனும் ரெசிபி செய்து கொடுக்க வேண்டுமெனில், அதற்கு காளான் டோஸ்ட் சரியானதாக இருக்கும். அதிலும் இது ஸ்நாக்ஸ் போன்று இருப்பதோடு, பசியோடு வரும் குழந்தைகளின் பசியை போக்கும் சிறந்த மற்றும் ஆரோக்கியமான ஒரு ரெசிபியாகவும் இருக்கும்.
மேலும் காளான் டோஸ்ட் செய்வது என்பது மிகவும் எளிது. இப்போது அதன் செய்முறையைப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பட்டன் காளான் - 8 (நறுக்கியது)
பிரட் துண்டுகள் - 8
ஆலிவ் ஆயில் - 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு - 2 பற்கள் (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது)
க்ரீம் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சீஸ் - 2 டேபிள் ஸ்பூன் (துருவியது)
நெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஆலிவ் ஆயில் ஊற்றி காய்ந்ததும், பூண்டு மற்றும் வெங்காயம் சேர்த்து, லேசாக உப்பு தூவி பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின்னர் அதில் நறுக்கி வைத்துள்ள காளான்களை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
பிறகு க்ரீம் மற்றும் சீஸ் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
அதே சமயத்தில் மற்றொரு அடுப்பில் தோசைக்கல்லை வைத்து காய்ந்ததும், பிரட் துண்டுகளை கல்லில் போட்டு, பிரட்டின் மேல் நெய் சேர்த்து முன்னும் பின்னும் பொன்னிறமாக சுட்டு எடுக்க வேண்டும். இதேப் போன்று அனைத்து பிரட் துண்டுகளையும் தோசைக்கல்லில் போட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு பிரட் துண்டின் மேல், காளான் கலவையை கொஞ்சமாக வைத்து, மற்றொரு பிரட்டைக் கொண்டு மூடி, பரிமாற வேண்டும்.
இப்போது சுவையான காளான் டோஸ்ட் ரெடி!!!

Post a Comment