இது இங்கு ஹாலோவின் பார்டிக்கு எங்கவீட்டில் செய்தது. எல்லா குழந்தைகளும் பெரியவர்களும் விரும்பி சாப்பிடாங்க.
சைனா க்ராஸ் - 1 பாக்கெட்
சாக்லேட் பௌடர் - 1 தே.க
பால் - 1 கப்
ஆரஞ் கலர் - 1/2 தே.க
பாதாம், பிஸ்தா - விரும்பினால்
உலர் தேங்காய் துருவல் - 1 தேங்காய் துருவல்
இரண்டு ப்ளேவரில் செய்தது.
1.தேங்காய் துருவல்+சாக்லேட் செய்தது
2.ஆரஞ் பேளவர்
செய்முறை
சைனா க்ராஸை ஒன்றிரண்டாக பொடிக்கவும்.
தண்னிரில் அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
பாத்திரத்தில் அரை கப் தண்ணிர்,பால் விட்டு குறைந்த தீயில் வைத்து
நல்ல கொதிக்க விடவும்.
கொஞ்சம் சைனா க்ராஸை கலர் சேர்த்து மீண்டும் ஐந்து நிமிடம் கொதிக்கவிடவும்.
கொதித்ததும் அதை வடிகட்டி ஒரு
ட்ரேயில் அல்லது பாத்திரத்தில் விட்டு ப்ரிட்ஜில் வைக்கவும்.
ஒரு மணிநேரம் கழிந்து விரும்பிய வடிவில் கட் செய்து சாப்பிடவும்.
இது கஸ்டர்டில் போட்டும் சாப்பிடலாம்.
மீதீயூள்ள சைனா க்ராஸில் சாக்லேட் பௌடர்+தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கலந்து ஐந்து நிமிடம் கொதிக்கவிடவும் அதில் பாதாம் பருப்பை சேர்த்து நன்றாக கலந்து சூடு ஆறியதும் ட்ரேயில் விட்டு ப்ரிட்ஜில் வைத்து எடுத்து சாப்பிடலாம்.
உடல் சூடிற்க்கு மிக்க நல்லது.
இது என் தோழி ஜலீலா அவர்களில் குறிப்பை பார்த்து நான் சில ப்ளேவரோடு சேர்த்து செய்தது.
நீண்ட நாட்களாக செய்ய நினைத்து அது ஒரு வழியா வெற்றிகரமாக செய்து முடிச்சாச்சு.
நிங்களும் எல்லாரும் முடிந்தால் செய்து பாருங்க.
என் குழந்தைகள் ரொம்ப விரும்பி சாப்பிடவில்லை.
என் வீட்டிற்க்கு வந்திருந்த எல்லொரும் விரும்பி சாப்பிடார்கள்.
நன்றி ஜலீ.
Post a Comment