சாம்பாரை இறக்கும்போது, அதில் வறுத்துப் பொடித்த தனியாப் பொடியைத் தூவி இறக்கினால், கும்மென்று வாசனை தூக்கும்.
மோர்க் குழம்பு செய்யும்போது, சிறிதளவு ஓமத்தை அரைத்துவிட்டால், குழம்பு ருசியாகவும் வாசனையாகவும் இருக்கும்.
நெய் காய்ச்சும்போது, சிறிதளவு உப்பு சேர்த்துக் காய்ச்சினால், நெய் வாசனையாக இருப்பதோடு, நீண்ட நாள் கெடாமலும் இருக்கும்.
இட்லிப்பொடி அரைக்கும்போது, சிறிது வேர்க்கடலை சேர்த்து அரைத்து வைத்துக்கொண்டால்,சுவை கூடுதலாகும்.
ரவா தோசை செய்யும்போது 2 தேக்கரண்டி சோளமாவு சேர்த்து செய்தால், தோசை நன்கு சிவந்து மொறுமொறுவென்று இருப்பதோடு, உடம்பிற்கு நல்லது.
இரவில் பால் சாப்பிடும் பழக்கம் இருந்தால், பாலில் 6 பூண்டுப் பற்களை போட்டுக்காய்ச்சி சாப்பிட்டால், கொலாஸ்ட்ரல் பிரச்சினையே வராது.
Post a Comment