BREAKING NEWS

Category 5

Category 6

Category 7

Wednesday, June 19, 2013

மட்டன் ரோகன் ஜோஷ்

மட்டன் ரோகன் ஜோஷ் ஒரு காஷ்மீரி ஸ்டைல் உணவுகளில் மிகவும் பிரபலமானது. இந்த ரெசிபி காஷ்மீரி அசைவ உணவுகளிலேயே மிகவும் சுவையானது. மேலும் இதனை வீட்டில் விருந்தினர்கள் வரும் போது செய்தால், சற்று ஸ்பெஷலான மட்டன் ரெசிபி போன்று இருப்பதால், நல்ல பாராட்டைப் பெறலாம். 
 
இப்போது இந்த மட்டன் ரோகன் ஜோஷ் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! 
mutton rogan josh kashmiri delight
தேவையான பொருட்கள்: 
 
மட்டன் - 1 கிலோ 
வெங்காயம் - 4 (நறுக்கியது) 
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன் 
பச்சை ஏலக்காய் - 5 
பிரியாணி இலை - 2 
கிராம்பு - 6 
மிளகு - 1 டீஸ்பூன் 
பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன் 
சோம்பு தூள்- 1 டேபிள் ஸ்பூன் 
இஞ்சி பொடி - 1 டேபிள் ஸ்பூன் 
காஷ்மீரி மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் 
மல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன் 
தயிர் - 1 கப் 
கடுகு எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் 
வெதுவெதுப்பான நீர் - 4 
கப் உப்பு - தேவையான அளவு 

செய்முறை: 
 
முதலில் மட்டனை நன்கு கழுவி, அதில் தயிர், 1 டீஸ்பூன் மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து, 2 மணிநேரம் தனியாக ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, ஏலக்காய், கிராம்பு, பட்டை, மிளகு மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு 2 நிமிடம் வறுத்துக் கொள்ள வேண்டும். 
 
 பின்பு நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, 2 நிமிடம் வதக்க வேண்டும். 
 
பிறகு ஊற வைத்துள்ள மட்டனை சேர்த்து, மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் சோம்பு தூள் சேர்த்து, 5-6 நிமிடம் கிளறி விட வேண்டும். 
 
அடுத்து வெதுவெதுப்பான நீரை சேர்த்து, உப்பு மற்றும் இஞ்சி பொடி சேர்த்து, 15 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும். 15 நிமிடம் ஆன பின், அதனை ஒரு முறை கிளறிவிட்டு, மீண்டும் 25-30 நிமிடம் மூடி வைத்து, மட்டன் வேகும் வரை அடுப்பில் வைத்து இறக்க வேண்டும். 
 
இப்போது சுவையான மட்டன் ரோகன் ஜோஷ் ரெடி!!! 
 
இதனை சாதத்துடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.
-roojavanam-

Post a Comment

 
Copyright © 2013 சமையல் குறிப்புக்கள்
Shared by WpCoderX