மீன் - 2 எல்பிஎஸ்
வெந்தயம் - 1/4 டீஸ்பூண்
கரிவேப்பிலை - 5
பச்சைமிளகாய் - 2
தக்காளி - 1(நீளமாக கீறியது)
கத்தரிக்காய் - 2(நீளமாக கீறியது)
உப்பு -தேவைக்கு
புளி - எலுமிச்சையளவு
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூண்
வறுத்து அரைக்க
தேங்காய் - 1 கப்
காய்ந்த மிளகாய் - 5
மிளகு - 10
பெருஞ்சீரகம் - 10
வெங்காயம் - 5 பல்
கரிவேப்பிலை - 2 ஆர்க்கு
மல்லி - 2 டீஸ்பூண்
மீனை நன்கு சுத்தம் செய்து துண்டுகளாக்கி கொள்ளவும்
அடுப்பில் கடாயை வைத்து மேலே வறுக்க கொடுத்தவற்றை போட்டு நன்கு சிவக்க வறுத்து கொள்ளவும். கரிந்து விட கூடாது.
பின்னர் அதை மிக்சியில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும்
கடாயில் அரைத்த மசலாவை போட்டு வெந்தயம், கீறிய பச்சமிளகாய்,கரிவேப்பிலை,உப்பு, புளி,மஞ்சள்தூள் சேர்த்து கலக்கி அடுப்பில் வைக்கவும்.
ஒரு கொதி வந்தவுடன் மீன், தக்காளி,கத்தரிக்காய் போட்டு முடி போட்டு கொதிக்கவிடவும்
கத்தரிக்காய் வெந்ததும் 5 நிமிடம் சிறு தீயில் வைத்தால் எண்ணெய் தெளியும் பின் இறக்கவும்
அருமையான மீன் குழம்பு ரெடி
குறிப்பு
.கத்தரிக்காயிற்க்கு பதில் முருங்கக்காய் சேர்த்தால் இன்னும் சுவை அதிகமாகும்
.புளியும் , உப்பும் கூட்டியொ குறைத்தோ கொள்ளலாம்
.வஞ்சிரம்,சூரை(மாசிமீன்), மத்தி போன்ற மீன் நன்றாக இருக்கும்
Post a Comment