BREAKING NEWS

Category 5

Category 6

Category 7

Friday, June 21, 2013

மின்வெட்டால் ஃப்ரிட்ஜில் இருக்கும் உணவுகளுக்கு பாதிப்பு ஏற்படுமா?

http://tamil.boldsky.com/img/2012/08/28-refrigerator21-300.jpg'
மின்வெட்டால் ஃப்ரிட்ஜில் இருக்கும் உணவுகளுக்கு பாதிப்பு ஏற்படுமா பதில் சொல்கிறார் டயட்டீஷியன் ஷீலா பால்
காய்கறிகள், பழங்கள், சமைத்த உணவுகளை ஃப்ரிட்ஜில் ஒரு நாள்தான் வைத்திருக்கலாம். பல நாட்கள் வைத்திருந்து சூடுபடுத்தி சாப்பிடுவது, மறுபடியும் ஃப்ரிட்ஜில் வைப்பது போன்றவற்றால் உணவோடு உடல்நலமும் பாதிக்கப்படும். மின்வெட்டுகாரணமாக, குளிர்ச்சியை இழக்கும் இப்பொருட்களில் பாக்டீரியாக்கள் பரவி, உணவைப் பாழாக்கிவிடும்.
-
மறுபடியும் மின்சாரம் வந்து குளிர்ச்சியானதற்குப் பிறகு உங்கள் உணவின் தரத்துக்கு எந்த உத்தர வாதமும் இல்லை. அசைவ உணவுகளை ஃப்ரிட்ஜில் வைப்பதை தவிர்த்துவிடுங்கள். இதன் மூலம் உருவாகும் நுண்கிருமிகள் உணவில் நுழைவதால், வயிற்றுப்போக்கில் ஆரம்பிக்கும் பிரச்னை நாளடைவில் உறுப்புகளையே செயலிழக்கச் செய்துவிடும்.
-
காய்கறிகளை நறுக்கி அப்படியே வைக்காமல், ஒரு கவரில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். எந்தப் பொருளையும் ஒரு நாளைக்கு மேல் ஃப்ரிட்ஜில் வைக்காதீர்கள். இட்லி மாவை வாரக்கணக்கில் ஃப்ரிட்ஜில்வைத்திருக்காமல் 48 மணி நேரத்துக்குள் பயன்படுத்திவிடுங்கள். ஃப்ரிட்ஜில் இருந்து ஒரு பொருளை எடுத்தவுடன் சூடுபடுத்தி, மறுபடியும் அதை ஃப்ரிட்ஜில் வைப்பதைத் தவிர்த்துவிடுங்கள். இதையெல்லாம் விட அளவாக சமைப்பது சரியான
தீர்வு!
-
தினகரன்

Post a Comment

 
Copyright © 2013 சமையல் குறிப்புக்கள்
Shared by WpCoderX