க்ரான்பெர்ரி ஊறுகாய் தேவையானவை க்ரான்பெர்ரி காய்கள் 1 கப் மிளாகாய்த்தூள் ½ தே.க(காரத்திற்கேப்ப) கடுகு ¼ தே.க மஞ்சள்த்தூள் ¼ தே.க வெந்தயத்தூள் ¼ தே.க நல்லெண்ணெய் ½ தே.க பெருங்காயத்தூள் ¼ தே.க உப்பு தேவைகேற்ப்ப செய்முறை ஒரு பாத்திரத்தில் க்ரான்பெர்ரையை நன்றாக தண்ணிர் விட்டு அலசி ஒரு பேப்பர் டவலால் நன்றாக துடைத்தெடுக்கவும், அதை இரண்டாக அரியவும்.(அல்லது முழுதுமாகவும்) போடலாம். கடாயில் எண்ண்ய் விட்டு காய்ந்ததும் கடுகு போடவும், பின் வெந்தய்த்தூள், மஞ்சள்த்தூள், பெருங்காயத்தூள், மிளாகாய்த்தூள் போட்டு க்ரான்பெர்ரியையும் போடவும், நன்றாக கலந்து உப்பையும் சேர்த்து மீண்டும் கலந்துவிடவும்.இதை நல்ல ஜாடியில் அல்லது பாட்டிலில் போட்டுவைக்கவும். உடனேயும் தொட்டு சாப்பிடலாம், ஒரிரண்டு நாட்கள் கழிந்து சாப்பிட்டால் மேலும் நல்ல ஊறி ருசியும் நன்றாக இருக்கும். ப்ரிட்ஜில் வைத்தெடுத்தால் இரண்டு மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.இதில் நிறய்ய மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment