தேவையானவை
வற்றல் மிளகாய் - 2
பொட்டு கடலை - 2 தே.க
உளுத்தம் பருப்பு - 1/2 கப்
கடலை பருப்பு - 1/2 கப்
எள் - 1 தே.க
பெருங்காயம் - 1/2 தே.க
எண்ணெய் - 1 தே.க
செய்முறை
கடாயில் எள்ளை எண்ணையில்லாமல் வெடிக்க வறுக்கவும்.
பொட்டுகடலை வாசனை வரும் வரை வறுக்கவும்.
மற்ற எல்லா பொருட்களை நல்ல பொன்நிறமாக வரும் வரை வறுக்கவும்.
கடைசியாக எண்ணெய் விட்டு பெருங்காயம், வற்றல் மிளகாய்
சேர்த்து வறுக்கவும்.
சூடு ஆறியதும் உப்பு எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக பொடிக்கவும்.
இதை ஒரு மாதம் வரை உபயோகிக்கலாம்.
இட்லி,தோசை ஊத்தப்பம்,பொடி தோசை எல்லாவற்றிக்கும் தொட்டு
-vijisvegkitchen-
Post a Comment