BREAKING NEWS

Category 5

Category 6

Category 7

Thursday, June 20, 2013

செய்முறை கம்பு கூழ்


கம்பு கூழ்


தேவையான பொருட்கள் :
கம்பு மாவு - 1 ௧ப்
சாதம் ஊறிய தண்ணீர்(நீராகாரம் )-கரைக்க .(இதில் கரைத்து செய்வதால் சுவை கூடும்

உப்பு -தேவையான அளவு
கரைக்க :
சின்ன வெங்காயம் -5(அ )6 (துண்டுகளாக நறுக்கியது )
பச்சை மிளகாய் - சிறியது (துண்டுகளாக நறுக்கியது )


மோர்-1 சிறிய கப்

துருவிய மாங்காய் -சிறிது

சாதம் - 2 கை அளவு (பிசைந்தது )

செய்முறை:

கம்பு மாவை நீராகாரம் விட்டு தோசை மாவை விட கொஞ்சம் நீர்க்க கரைத்துக்கொள்ளவும் ....உப்பு சேர்க்க வேண்டாம் ...
இதை 6 to 8 மணி நேரம் அப்படியே புளிக்க விடவும்



பின்பு ஒரு அடி கனமான பாத்திரத்தில் 4 டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்
அதில் உப்பு ,கரைத்த அந்த கம்பு நீரை விட்டு கிளறவும்


அடிபிடிக்காமல் விட்டு விட்டு கிளறிக்கொண்டே வந்தால் கம்பு கெட்டியாகி கொதிக்கும் ...


களி போல வந்ததும் இறக்கி வேறு பாத்திரத்தில் மாற்றவும்
அதை 6 to 8 மணி நேரம் புளிக்க விட்டு கொள்ளவும்


இப்போது கூழ் கெட்டியாக இருக்கும் அதை 1 கை அளவு எடுத்து அதனுடன் வெங்காயம் ,பச்சை மிளகாய் ,மோர், துருவிய மாங்காய் ,சாதம் கலந்து நீர் சேர்த்து கரைக்கவும் ...இதனை இப்போது பரிமாறலாம் ....


இதனுடன் மோர் மிளகாய் ,ஊறுகாய் , வற்றல் போன்றவை தொட்டு கொள்ள சுவை கூடும் ....


குழந்தைகளுக்கு தொட்டுக்கொள்ள வெல்லம்(உடலுக்கு நல்லது )
கொடுக்கலாம் (அபார சுவையுடன் இருக்கும் )(வெல்லத்திற்க்காகவே நிறைய சாப்பிடுவர்கள் )

அடுத்த நாள் காலை கூழ் சாப்பிட ,முதல் நாள் காலை மாவை கரைத்து,மாலை
கூழ் செய்யலாம்
பயன்கள் :
இதில் புரதம், கொழுப்புச்சத்து, தாது உப்புக்கள் நார்ச்சத்துக்கள் மற்றும் மாவுச்சத்து உள்ளது.
உடல் உஷ்ணமடைய செய்வதை குறைக்கிறது. மற்றும் வயிற்றுப்புண் மலச்சிக்கலை தவிர்க்க வல்லது.
வெங்காயம் சேர்ப்பதால் உடலுக்கு மேலும் நல்ல பயன்கள் உண்டு ....

Post a Comment

 
Copyright © 2013 சமையல் குறிப்புக்கள்
Shared by WpCoderX