மாலை வேளையில் ஸ்நாக்ஸாக சாப்பிடும் ரெசிபிக்களுக்கு அளவே இல்லை. அதிலும் எண்ணெயில் பொரித்து சாப்பிடும் பஜ்ஜி, பக்கோடா, போண்டா போன்றவையெனில், அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அவை அனைத்திலுமே பல வகைகள் உள்ளன. இப்போது பக்கோடாவில் ஒன்றான வெந்தயக் கீரை பக்கோடாவை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம்.
அதிலும் இந்த வெந்தயக் கீரை பக்கோடாவின் ஸ்பெஷல் என்னவென்றால், இந்த பக்கோடாவில் சாதம் சேர்த்து செய்வது தான். சரி, அந்த பக்கோடாவின் செய்முறைப் பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
வெந்தயக் கீரை - 3 கப் (நறுக்கியது)
சாதம் - 1 கப்
பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
கடலை மாவு - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு (பொரிப்பதற்கு)
செய்முறை:
முதலில் ஒரு பௌலில் வெந்தயக் கீரை, சாதம், பச்சை மிளகாய், வெங்காயம், உப்பு, மிளகாய் தூள், பெருங்காயத் தூள் மற்றும் கடலை மாவு சேர்த்து, தண்ணீர் ஊற்றி, பக்கோடா மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை சிறு உருண்டைகளாக உருட்டி, ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருட்டி வைத்துள்ள பக்கோடாக்களை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இப்போது சுவையான வெந்தயக் கீரை பக்கோடா ரெடி!!!
/tamil.boldsky.
Post a Comment