ஊறுகாய் பிடிக்காதவர்கள் கூட பூண்டு ஊறுகாயை விரும்பி சாப்பிடுவார்கள். காரணம், அது உடலுக்கு நல்லது என்பதால். வீட்டிலேயே ருசியான பூண்டு ஊறுகாயை செய்யலாம்.
தேவையான பொருட்கள்
பூண்டு - 2 கப் (தோல் உரித்தது)
வறுத்து அரைத்த சீரகத் தூள் -4 ஸ்பூன்
மிளகாய் தூள் - 4 ஸ்பூன்
வெந்தயத் தூள் - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
எலுமிச்சை சாறு - கால் கப்
எண்ணெய், உப்பு கடுகு - தேவையான அளவு
செய்முறை
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்து, அதில் பூண்டு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
பூண்டு வதங்கியதும் அதில் மிளகாய் தூள், வெந்தயத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து கிளறி இறக்கவும்.
இறக்கியதும் எலுமிச்சை சாறை சேர்த்து கிளறி மூடி வைக்கவும்.
பூண்டில் மசாலா தன்மை ஊறியதும் பயன்படுத்தலாம்.
Post a Comment