இன்று என் பிறந்தநாளுக்கு நான் செய்த இனிப்பு, இன்று வெளியில் லன்ஞ்க்கு ஓலிவ் கார்டன்+கோவில் போய் வந்து மீதியை அடுத்தபதிவில் சந்திக்கிறேன். எல்லாரும் வந்து இனிப்பை பார்த்து நிங்களும் செய்விங்க என்று நம்புகிறேன்.நேரில் வருகிறவர்களுக்கு நிறையவும், வராதவர்களுக்கு அவசியம் பார்சல் உண்டு. எல்லாரும் ஹேப்பி தானே.வாங்கோ வாங்கோ.
தேவையானவை
பைனாப்பிள் துண்டுகள் - 1கப்
கூல் வீப் - 1
மில்க்மெய்ட் - 1 டின்
பாதாம், அக்ரூட் - 1 தே.க
செய்முறை
ஒரு பெரியா கேஸ்ரோல் அல்லது நல்ல ப்ரிஜரில் வைக்ககூடிய சேப் பௌல் அதில் கூல் வீப்+பைனாப்பிள் துண்டுகள் (மிக மிக பொடியாக அரிந்தது, முடிந்தால் மிக்ஸியில் போட்டு ஒரு சாப் செய்தது)மில்க் மெய்ட் எல்லாவற்றையும் போட்டு நன்றாக போர்க்கால் கிளறிவிட்டு அதன் மேல் உலர் பருப்புகள் போட்டு அலங்கரித்து ப்ரிஜரில் 3 மணி நேரம் வைத்து பரிமாறுவதற்க்கு முன் ப்ரிஜ்ஜில் வைத்து எடுத்து சாப்பிடவும். விநாடிகளில் காலியாகிவிடும்.
எளிதில் அடுப்பே இல்லாமல் செய்து அசத்திவிடகூடிய இனிப்பு.
-vijisvegkitchen.-
Post a Comment