BREAKING NEWS

Category 5

Category 6

Category 7

Wednesday, June 19, 2013

புதினா பன்னீர் புலாவ்

 
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - 2 கப்
பன்னீர் - 200 கிராம் (சிறிதாக நறுக்கியது)
புதினா - 1 கட்டு
வெங்காயம் - 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
கிராம்பு - 4
பட்டை - 1 இன்ச்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - 4 கப்

செய்முறை:

முதலில் அரிசியை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் கழுவிய அரிசியைப் போட்டு, 4 கப் தண்ணீர் ஊற்றி, 10 நிமிடம் கொதிக்க விட்டு, சாதமாக வந்த பின் இறக்கி விட வேண்டும்.

பின்பு அதில் உள்ள அதிகப்படியான நீரை வடித்துவிட்டு, சாதத்தை லேசாக குளிர வைக்க வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கி வைத்துள்ள பன்னீர் துண்டுகளை 2-3 நிமிடம் வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

அதே சமயத்தில் புதினாவை கழுவி, மிக்ஸியில் போட்டு, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின் அதே வாணலியில் சிறிது எண்ணெய் சேர்த்து காய்ந்ததும், பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து, பொன்னிறமாக வதக்கி, அரைத்து வைத்துள்ள பேஸ்ட் மற்றும் உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.

இறுதியில் வறுத்து வைத்துள்ள பன்னீர் துண்டுகள் மற்றும் வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து, மீண்டும் 2-3 நிமிடம் பிரட்டி, இறக்கி விட வேண்டும்.

இப்போது சுவையான புதினா பன்னீர் புலாவ் ரெடி!!!

Post a Comment

 
Copyright © 2013 சமையல் குறிப்புக்கள்
Shared by WpCoderX