BREAKING NEWS

Category 5

Category 6

Category 7

Wednesday, June 26, 2013

செய்முறை அவரைக்காய் பொரியல்

அவரைக்காய் அனைவருக்குமே மிகவும் பிடித்த காய்கறிகளுள் ஒன்று. அதிலும் அவரைக்காயை பொரியல் செய்து சாப்பிட்டால், அதன் சுவையே தனி தான். பெரும்பாலும் இந்த பொரியல் தென்னிந்தியாவில் அதிலும் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமானது.

இப்போது அந்த அவரைக்காய் பொரியலை எப்படி எளிமையான முறையில் செய்வதென்று பார்ப்போமா!!!




தேவையான பொருட்கள்:

அவரைக்காய் - 1/4 கிலோ
பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
பூண்டு - 4 பற்கள் (தட்டியது)
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மல்லி தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
தேங்காய் - 1/4 கப் (துருவியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:
முதலில் அவரைக்காயை கழுவி, பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை மற்றும் கடலைப்பருப்பு சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

பிறகு பூண்டு சேர்த்து வதக்கி, நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

பின்பு நறுக்கிய அவரைக்காயை சேர்த்து, 2 நிமிடம் கிளறி, மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள் சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு, 1 கப் தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து தண்ணீர் நன்கு சுண்டும் வரை வேக வைக்க வேண்டும்.

தண்ணீரானது முற்றிலும் சுண்டியவுடன், துருவிய தேங்காயை சேர்த்து கிளறி இறக்கி விட வேண்டும்.

இப்போது சுவையான அவரைக்காய் பொரியல் ரெடி!!!
-tamilboldsky-

Post a Comment

 
Copyright © 2013 சமையல் குறிப்புக்கள்
Shared by WpCoderX