BREAKING NEWS

Category 5

Category 6

Category 7

Wednesday, June 26, 2013

சுயான் செய்முறை



அப்பம்



தேவையானவை


கோதுமை மாவு 1 கப்
அரிசி மாவு 1 தே.க
வாழைபழம் 1
ஏலத்தூள் 1/2 தே.க
வெல்லம் 1 கப் (தூளாக்கியது)
எண்ணெய் பொரிக்க

செய்முறை


பாத்திரத்தில் வாழைபழத்தை தோலெடுத்து நன்றாக மாஷரால்
அல்லது முள்கரண்டியால மசிக்கவும்.அதே பாத்திரத்தில் மாவு
வகைகளை போடவும்.ஏலத்துளையும் சேர்க்கவும்.
தூளாக்கிய வெல்லத்தை ஒரு பௌலில் கொஞ்சமா தண்னிர்
விட்டு அது கொதித்ததும் வெல்லத்தை சேர்த்து கொதிக்கவிடவும். 
கெட்டியானதும் அதை இந்த மாவுக்லவையில் ஊற்றி நன்றாக 
முள்க்ரண்டியால் கலக்கவும்.
கடாய் அல்லது குழிபணியார சட்டியில் எண்ணெய் விட்டு அது
சூடானதும் ஒரு பெரிய ஸ்பூனால் மாவை எடுத்து ஊற்றவும்.
மிதமான தீயில் வைத்து சூடக்கவும். 
பொன்னிறமானதும் திருப்பி போட்டு மறுபக்கமும் பொன்னிறமானதும்எடுக்கவும்.
இந்த அப்பம் மிகவும் டேஸ்டியாகவும், சாப்டாகவும் சாப்பிட நன்றாக இருக்கும்.
இதில் நல்ல கனிந்த வாழைபழம் 2 சேர்த்தால் மேலும் மிருதுவாக இருக்கும்.
குழந்தகள் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடுவாங்க
செய்வதற்க்கு எளிது.

என்னோட 100 வது பதிவு இந்த இனிய அப்பதோடு உங்களை மேலும் இனீப்பூட்ட
எப்பவும் போல் உங்க ஒத்துழைப்போடு தொடர்கிறேன்.
நன்றி நன்றி நன்றி நன்றி ..................
என் எல்லா நணபர்களுக்கும் இதில் தொடர்கின்ற என் தள நட்புகளுக்கும்
இனைய தளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

என் தள வருகையாளார்கள் எல்லொருக்கும் 100 வித இனிப்பு சமையோலோடு நன்றியை
தெரிவித்து கொள்கிறேன்.
குறிப்பு: இந்த் இனிப்பு ஸுகர் ப்ரி+பேட் ப்ரி.இது வெல்லதில் செய்வதால் தாரளாமாக எல்லோரும் சாப்பிடலாம்.

Post a Comment

 
Copyright © 2013 சமையல் குறிப்புக்கள்
Shared by WpCoderX