BREAKING NEWS

Category 5

Category 6

Category 7

Thursday, June 20, 2013

சுவையான சிக்கன் பிரியாணி செய்வது எப்படி?

சுவையான சிக்கன் பிரியாணி செய்வது எப்படி? 

தேவையான பொருள்கள்
சிக்கன் -- 1 கிலோ
பாஸ்மதி ரைஸ் -- 1 கிலோ
வெங்காயம் -- 6 எண்ணிக்கை
தக்காளி -- 4 எண்ணிக்கை
இஞ்சி&பூண்டு விழுது -- 4 தேக்கரண்டி
பிரிஞ்சி இலை --2 அல்லது 3
(பட்டை ,கிராம்பு ,ஏலக்காய் ,
அன்னாசி பூ ,கடல் பசி)பொடி செய்தது -- 1/2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் -- 8 எண்ணிக்கை
புதினா தழை -- சின்ன கட்டு 1
கொத்தமல்லி தழை -- சின்ன கட்டு 1
மஞ்சள் -- 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் -- 2 தேக்கரண்டி --தேவைக்கேற்ப
உப்பு -- தேவைக்கேற்ப
எண்ணெய் -- சிறிது
நெய் -- 2 தேக்கரண்டி
எலுமிச்சை -- 1/2 பழம்
தேங்காய் பால் -- 1 டம்ளர்
தண்ணீர் -- 1 டம்ளர் அரிசிக்கு 2 டம்ளர் தண்ணீர்
செய் முறை :
அரிசியை அரைமணி நேரம் ஊற வைத்துக்கொள்ளவும் .சிக்கெனை சற்று பெரிய துண்டுகளாக வெட்டி நன்கு கழுவிக்கொள்ளவும் . இந்த சிக்கெனில் ஒரு தேக்கரண்டி இஞ்சி &பூண்டு விழுது ,கொஞ்சம் உப்பு , மஞ்சள் பொடி சிறிது ,மிளகாய் பொடி போட்டு பிசைந்து கால் மணி நேரம் ஊற வைக்கவும் .பின் இதை பத்து நிமிடம் அடுப்பில் (சிம்) வேகவைக்கவும்.தண்ணீர் விடக்கூடாது.அரை வேக்காடு வெந்தால் போதும்.இப்படி செய்தால் சிக்கெனிலும் மசாலா சேர்ந்துவிடும் .தண்ணீர் விடக்கூடாது அது முக்கியம்.சிக்கன் விடும் தண்ணீரே போதும்.....
வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டி கொள்ளவும். தக்காளியை பொடிதாக வெட்டி கொள்ளவும். பச்சை மிளகாயை லேசாக கீறி கொள்ளவும் . புதினா & கொத்தமல்லியை நன்கு கழுவி அறிந்துகொள்ளவும்.
குக்கர்- அடுப்பில் வைத்து காய்ந்ததும் எண்ணெய் , நெய் விட்டு காய்ந்ததும் பிரிஞ்சி இலை போட்டு வெங்காயம் போட்டு வதக்கி பின் இஞ்சி & பூண்டு விழுது போட்டு மனம் வரும் வரை நன்கு வதக்கவும். பின் தக்காளி போட்டு வதக்கவும்.வதங்கியதும் பச்சை மிளகாய் ,புதினா & கொத்தமல்லி தழைகளை போடவும். இதோடு பொடி பண்ணி வைத்துள்ள பட்டை ,கிராம்பு.....பொடிகளையும் போட்டு நன்கு வதக்கவும்.(இதற்கு கரம்மசாலா போடாமல் இப்படி பொடி பண்ணி போட்டால் தான் நன்றாக இருக்கும்).......வதங்கியதும் உப்பு ,மஞ்சள் தூள், மிளகாய் பொடி போட்டு வதக்கி அளவு தண்ணீர் விடவும் .தண்ணீரில் ஒரு டம்ளர் குறைத்து அதற்கு பதில் ஒரு டம்ளர் தேங்காய் பால் விடவும். இது நன்கு கொதிக்கும் போது வேகவைத்துள்ள சிக்கன் , ஊறவைத்துள்ள (ஊற வைத்துள்ள தண்ணீரை வடித்து விடவும் )அரிசியை போடவும். பின் நன்கு கிளறி உப்பு , காரம் பார்த்து தேவைப்பட்டால் சேர்த்து கிளறி குக்கர் மூடி விடவும் . ஆவி வந்ததும் வெயிட் போட்டு.........அடுப்பை சிம் இல் வைத்து பத்து நிமிடம் கழித்து இறக்கவும். ஆவி போனதும் மூடியை திறந்து கிளறி விட்டு எலுமிச்சையை பிழிந்து விட்டு திரும்பவும் மூடி வைக்கவும் . பின் சிறிது நேரத்தில் பரிமாறலாம் . (உதிரியாக வேண்டுமானால் சிறிது தண்ணீரை குறைத்துக்கொள்ளலாம் . )
சிச்கெனுக்கு பதில் மட்டன் போட்டு மட்டன் பிரியாணி இது போல் செய்யலாம்.மட்டனையும் சிக்கெனை போல் அரை வேக்காடு வேக வைக்கவும்...சுவையான பிரியாணி ரெடி. செய்து மகிழுங்கள்.

Post a Comment

 
Copyright © 2013 சமையல் குறிப்புக்கள்
Shared by WpCoderX