தொதல்
ஈழத்து தமிழர்கள்உணவில் ஏதாவது ஒருவகையில் தேங்காய் கண்டிப்பாக இடம் பெற்றுவிடும்.
அதனாலேயே
தொதல் அங்கு பிறந்தது என்று சொல்லலாம்.
தேவையானவை[தொகு]
நான்கு தேங்காய்கள்
ஒரு சுண்டு சிவத்தப் பச்சைஅரிசி (சேரல்பச்சை)
இரண்டு கிலோ கித்துள்பனங்கட்டி அல்லது சர்க்கரை அல்லது சீனி (brown suger)
முந்திரிப்பருப்பு (தேவையான அளவு)
ஏலம் (சுவைக்கேற்ப)
செய்முறை[தொகு]
அரிசியை ஊறவைத்து இடித்தோ, அரைத்தோ மாவாக எடுத்துக் கொள்ளவும். (வறுக்கக் கூடாது)
தேங்காய்களைத் துருவி தண்ணீர் கலந்து கெட்டியான பாலாக பிளிந்து எடுத்துக் கொள்ளவும்.
பிளிந்து எடுக்கப் பட்ட பால், சர்க்கரை, அரிசிமா ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து இருப்புச்சட்டியில் இட்டு அளவான சூட்டில், சட்டியில் எண்ணெய் பிறந்து, ஒட்டாத பதம் வரும்வரை கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். சரியான பதம் வரும்போது வாசனைக்கு தூளாக்கிய ஏலத்தினையும், சுவைக்கு சிறிதாக்கிய முந்திரிப்பருப்பையும் சேர்த்து தட்டையான பாத்திரத்தில் பரப்பி விட வேண்டும். சூடு ஆறியதும் விருப்பத்துக்கு ஏற்ற வடிவத்தில் வெட்டி எடுத்துக் கொள்ளலாம்.
Post a Comment