BREAKING NEWS

Category 5

Category 6

Category 7

From our Blog

Showing posts with label மீன். Show all posts
Showing posts with label மீன். Show all posts

Friday, July 19, 2013

சுவையான மீன் வடை.

சுவையான மீன் வடை.

மீன் வடையின் சுவை அலாதியானது. அதிகம் முள் இல்லாத மீன்தான் வடை செய்ய ஏற்றது
 
தேவையான பொருட்கள்

மீன் துண்டுகள் - 500 கிராம்
முட்டை - 1உருளைக்கிழங்கு - 100 கிராம்
மிளகாய்த்தூள் - 1 டேபிள் ஸ்பூன்

பச்சைமிளகாய் - 3உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க


வடை செய்முறை

மீனை கழுவி சுத்தம் செய்து வானலியில் சிறிதளவு நீர்விட்டு வேக வைக்கவும். பின்னர் அதை எடுத்து முள், தோல் நீக்கி நன்கு பிசையவும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து நன்கு மசிக்கவும்.
வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக வெட்டவும்.
மீன், உருளைக்கிழங்கு, மிளகாய்த் தூள், வெட்டிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, முட்டை எல்லாம் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். எண்ணெயைக் காய வைத்து சிறுசிறு வடைகளாகத் தட்டிப் போட்டு பொன்னிறமாக சிவந்ததும் எடுக்கவும். ருசியான மீன் வடை தயார். இதை தோசைக்கல்லில் தட்டி வைத்து கட்லெட் போல செய்யலாம். சுவை சூப்பராக இருக்கும்.
குறிப்புகள்: மெஹர் சுல்தான்

Thursday, June 20, 2013

செட்டிநாடு மீன் குழம்பு

http://mathicaterings.com/images/thumbs/big/13.jpgதேவையான பொருட்கள்:
மீன் – அரை கிலோ
பூண்டு – 50 கிராம்
சின்ன வெங்காயம் – 50 கிராம்
புளி – 50 கிராம்
மிளகு – 30 கிராம்
சீரகம் – 2 டீஸ்பூன்
சுக்கு – 1 துண்டு
தனியாத் தூள் – ஒன்றரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
கடுகு, வெந்தயம் – அரை டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப
செய்முறை:
மீனை சுத்தம் செய்து வைக்கவும்.
சுக்கு, மிளகு, சீரகம், தனியாத் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை நன்றாக அரைத்து வைக்கவும்.
புளியை தண்ணீராக கரைத்து வைத்து கொள்ளவும்.
பிறகு அரைத்ததை புளியில் கரைத்து உப்பு போட்டு கரைக்கவும். பூண்டு, வெங்காயம் நசுக்கி அதைக் கூட்டிய குழம்பில் போட்டு கரைக்கவும்.
பிறகு ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம் தாளித்து கறிவேப்பிலை போட்டு கூட்டிய குழம்பை ஊற்றி மீன் போட்டு மூடி நன்றாக கொதித்த பிறகு (புளி வாசனை போன பிறகு)
கொத்தமல்லி தூவி மூடி வைக்கவும். இந்த குழம்பு மணமாக இருக்கும் மார்பு சளிக்கு நல்ல மருந்து. இது ரசம் போல தண்ணீராக இருக்கும்.

மீன்குழம்பு வறுத்து அரைத்த

Active Image
 
தேவையானவைImage
மீன்   - 2 எல்பிஎஸ்
வெந்தயம்  - 1/4 டீஸ்பூண்
கரிவேப்பிலை   - 5
பச்சைமிளகாய்  -  2
தக்காளி  - 1(நீளமாக கீறியது)
கத்தரிக்காய்  - 2(நீளமாக கீறியது)
உப்பு  -தேவைக்கு
புளி  - எலுமிச்சையளவு
மஞ்சள்தூள்  - 1/4  டீஸ்பூண்
Image
வறுத்து அரைக்க
தேங்காய்  - 1 கப்
காய்ந்த மிளகாய்  - 5
மிளகு  - 10
பெருஞ்சீரகம்  - 10
வெங்காயம்   - 5 பல்
கரிவேப்பிலை    -  2 ஆர்க்கு
மல்லி  - 2 டீஸ்பூண்
Image
மீனை நன்கு சுத்தம் செய்து துண்டுகளாக்கி கொள்ளவும்
Image
அடுப்பில் கடாயை வைத்து மேலே வறுக்க கொடுத்தவற்றை போட்டு நன்கு சிவக்க வறுத்து கொள்ளவும். கரிந்து விட கூடாது.
Image
பின்னர் அதை மிக்சியில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும்
Image
கடாயில்  அரைத்த மசலாவை போட்டு வெந்தயம், கீறிய பச்சமிளகாய்,கரிவேப்பிலை,உப்பு, புளி,மஞ்சள்தூள் சேர்த்து கலக்கி அடுப்பில் வைக்கவும்.
Image
ஒரு கொதி வந்தவுடன் மீன், தக்காளி,கத்தரிக்காய் போட்டு முடி போட்டு கொதிக்கவிடவும்
Image
கத்தரிக்காய் வெந்ததும் 5 நிமிடம் சிறு தீயில் வைத்தால் எண்ணெய் தெளியும் பின் இறக்கவும்
அருமையான மீன் குழம்பு ரெடி
குறிப்பு
.கத்தரிக்காயிற்க்கு பதில் முருங்கக்காய் சேர்த்தால் இன்னும் சுவை அதிகமாகும்
.புளியும் , உப்பும்  கூட்டியொ குறைத்தோ கொள்ளலாம்
.வஞ்சிரம்,சூரை(மாசிமீன்), மத்தி போன்ற மீன் நன்றாக இருக்கும்

செய்முறை தேங்காய்ப்பால் மீன்குழம்பு

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgsppX0MbfMyYICBo6lNfwxAUtrvqp88KGi_yylxX1b-EIcJXoSR7xCN_BswC3uUrbtnSYz4c3QmFrCWjjb5mjEzPthrY2ya_3TitFcBdXz3r10aCCsld_TOW5pe6GuqZs24GCIOdjfHoNy/s1600/isi+fish-f.jpg
மீன் - அரை கிலோ
தக்காளி - 2
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 4
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 6 பல்
மல்லி, கறிவேப்பிலை - சிறிது
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
மல்லித்தூள் - 4 தேக்கரண்டி
சீரகத்தூள் - அரை தேக்கரண்டி
பெருஞ்சீரகத்தூள் - கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
புளி - சிறிய எலுமிச்சை அளவு
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
கெட்டி தேங்காய்ப்பால் - ஒரு கப்
உப்பு - தேவைக்கு




முதலில் நறுக்க வேண்டியவற்றை நறுக்கி தயார் செய்து கொள்ளவும். தேங்காய்ப் பால் எடுத்து வைக்கவும். மீனை சுத்தம் செய்து கழுவி தண்ணீர் வடித்து வைக்கவும். புளி கரைத்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, வெந்தயம் போட்டு வெடித்தவுடன் கறிவேப்பிலை சேர்க்கவும். அத்துடன் நறுக்கிய இஞ்சி பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

சிறிது வதங்கியதும் நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், சிறிது உப்பு சேர்த்து மூடி போட்டு நன்கு வதங்க விடவும்.

அதில் அனைத்து மசாலா தூளையும் சேர்த்து சிறிது பிரட்டி விட்டு புளித்தண்ணீரை சேர்க்கவும். மசாலா, புளித்தண்ணீர் வாடை கொதித்து அடங்கட்டும்.

பின்பு சுத்தம் செய்த மீன் துண்டுகளை சேர்க்கவும். கொதி வரவும் அடுப்பை சிம்மில் வைக்கவும். உப்பு சரி பார்க்கவும்.

மீன் வெந்தவுடன் தேங்காய்ப்பாலை சேர்க்கவும். அடுப்பு சிம்மில் இருந்து கொதிக்க வேண்டும். குழம்பு கொதித்து எண்ணெய் தெளிய ஆரம்பிக்கவும், நறுக்கிய மல்லிதழை தூவி மூடி அடுப்பை அணைக்கவும்.

சுவையான தேங்காய்ப்பால் மீன் குழம்பு ரெடி. இதனை சப்பாத்தி, பரோட்டா, ஆப்பம், தோசை, இட்லி, நெய்ச்சோறு, ப்ளைன் சாதத்துடனும் பரிமாறலாம்.

நன்றி:அறுசுவை.கம
 
Copyright © 2013 சமையல் குறிப்புக்கள்
Shared by WpCoderX