BREAKING NEWS

Category 5

Category 6

Category 7

Thursday, June 20, 2013

செய்முறை தேங்காய்ப்பால் மீன்குழம்பு

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgsppX0MbfMyYICBo6lNfwxAUtrvqp88KGi_yylxX1b-EIcJXoSR7xCN_BswC3uUrbtnSYz4c3QmFrCWjjb5mjEzPthrY2ya_3TitFcBdXz3r10aCCsld_TOW5pe6GuqZs24GCIOdjfHoNy/s1600/isi+fish-f.jpg
மீன் - அரை கிலோ
தக்காளி - 2
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 4
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 6 பல்
மல்லி, கறிவேப்பிலை - சிறிது
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
மல்லித்தூள் - 4 தேக்கரண்டி
சீரகத்தூள் - அரை தேக்கரண்டி
பெருஞ்சீரகத்தூள் - கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
புளி - சிறிய எலுமிச்சை அளவு
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
கெட்டி தேங்காய்ப்பால் - ஒரு கப்
உப்பு - தேவைக்கு




முதலில் நறுக்க வேண்டியவற்றை நறுக்கி தயார் செய்து கொள்ளவும். தேங்காய்ப் பால் எடுத்து வைக்கவும். மீனை சுத்தம் செய்து கழுவி தண்ணீர் வடித்து வைக்கவும். புளி கரைத்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, வெந்தயம் போட்டு வெடித்தவுடன் கறிவேப்பிலை சேர்க்கவும். அத்துடன் நறுக்கிய இஞ்சி பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

சிறிது வதங்கியதும் நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், சிறிது உப்பு சேர்த்து மூடி போட்டு நன்கு வதங்க விடவும்.

அதில் அனைத்து மசாலா தூளையும் சேர்த்து சிறிது பிரட்டி விட்டு புளித்தண்ணீரை சேர்க்கவும். மசாலா, புளித்தண்ணீர் வாடை கொதித்து அடங்கட்டும்.

பின்பு சுத்தம் செய்த மீன் துண்டுகளை சேர்க்கவும். கொதி வரவும் அடுப்பை சிம்மில் வைக்கவும். உப்பு சரி பார்க்கவும்.

மீன் வெந்தவுடன் தேங்காய்ப்பாலை சேர்க்கவும். அடுப்பு சிம்மில் இருந்து கொதிக்க வேண்டும். குழம்பு கொதித்து எண்ணெய் தெளிய ஆரம்பிக்கவும், நறுக்கிய மல்லிதழை தூவி மூடி அடுப்பை அணைக்கவும்.

சுவையான தேங்காய்ப்பால் மீன் குழம்பு ரெடி. இதனை சப்பாத்தி, பரோட்டா, ஆப்பம், தோசை, இட்லி, நெய்ச்சோறு, ப்ளைன் சாதத்துடனும் பரிமாறலாம்.

நன்றி:அறுசுவை.கம

Post a Comment

 
Copyright © 2013 சமையல் குறிப்புக்கள்
Shared by WpCoderX