BREAKING NEWS

Category 5

Category 6

Category 7

Wednesday, June 26, 2013

புத்தாண்டு new year கேக்




ப்ளெயின் கேக்

புத்தாண்டு ஸ்பெஷல் ப்ருட்ஸ் கஸ்டர்டு & ப்ளெயின் கேக்.
எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

தேவையானவை
ஆல் பர்பஸ மாவு (மைதா மாவு) 1 கப்
சர்க்கரை 3/4 கப்
வெனிலா எசன்ஸ் 1 டீஸ்பூன்
முட்டை 2
பேக்கிங் பௌடர் 1 டீஸ்பூன்
பேக்கிங் சோடா 1 டீஸ்பூன்
உப்பு 1 சிட்டிகை
பட்டர் 8 தே.க(1 ஸ்டிக்)
கேக் பான்
குக்கிங் ஸ்ப்ரே அல்லது எண்ணெய் - 1/2 தே.க
செய்முறை
அவனை 350 டிகிரி முற்சூடு செய்யவும்.
முதலில் மாவை சலித்து வைக்கவும் அதில் பேக்கிங் சோடா, பேக்கிங் பௌடர் சேர்க்கவும்.
ஒரு பெரிய பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி நல்ல ஹேண்ட் மிக்ஸரில் அடிக்கவும்.
அதில் வெண்ணெய் சேர்த்து மீண்டும் ஐந்து செகண்ட்ஸ் அடிக்கவும்
இதில் வெனிலா எசன்ஸ், சர்க்கரை சேர்த்து மீண்டும் அடிக்கவும்.
சலித்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்றாக
கலந்து ஹேண்ட் மிக்ஸரில் அடிக்கவும்.
அவனில் கேக் பானில் குக்கிங் ஸ்ப்ரே அல்லது எண்ணெய் தடவி
இந்த கேக் மாவு கலவையை ஊற்றி 25 ல் இருந்து 30 நிமிடம் பேக் செய்யவும்.
டூத் பிக்க்ர் அல்லது போஃக்கால் வைத்து எடுத்து ஒட்டாமல் வந்ததும் வெளியில் எடுக்கவும்.
நன்றாக ஆறியபின் ப்ராஸ்டிங் செய்யலாம்.
இங்கு ப்ளயின் கேக் தான் செய்துள்ளேன். மேலே ஸ்ப்ரிங்ள்ஸ்
தூவியும் அல்லது பொடித்த சர்க்கரையும் மேல் தூவியும் பரிமாறலாம்.
என் மகளுக்கு ப்ராஸ்டிங், ஐசிங் விரும்பாததினால் செய்யவில்லை.
இது டி கேக்காகவும், இதை சாப்பிடலாம்.
விரும்பினால் சாக்லேட் ப்ராஸ்டிங், ஐஸிங், க்ரிம் சேர்த்தும் சாப்பிடலாம்

Post a Comment

 
Copyright © 2013 சமையல் குறிப்புக்கள்
Shared by WpCoderX