பால் பௌடர் கோகனட் லட்டு
இன்று என் திருமனநாளுக்கு நான் செய்த இனிப்பு.
தேவையானவை
மில்க் பௌடர் - 1 கப்
கண்டென்ஸ்ட் மில்க் - 1 டின்
தேங்காய துருவல் - 2 தே.க
பால் - 2 தே.க
வெண்ணெய் - 2 தே.க
முந்திரி பருப்பு - 4
ஏலத்தூள் - 1 தே.க
செய்முறை
மைக்ரோவேவ் பௌளில் முதலில் வெண்ணெயை போட்டு உருக வைக்கவும்.
பால் பௌடர், கண்டென்ஸ்ட் மில்க்,பால்,தேங்காய துருவல் சேர்த்து 1 நிமிடம் வைக்கவும்.
வெளியில் எடுத்து போர்க்கால நன்றாக கிளறி விட்டு மீண்டும் 1 நிமிடம் வைக்கவும்.
வெளியில் எடுத்து ஏலத்தூள் சேர்த்து 1 நிமிடம் வைத்து வெளியில் எடுத்து நன்றாக கிளறி
ஆறவிடவும்.
மீதமான் சூட்டிலேயே உருண்டைகளாக பிடிக்கவும்.
எளிதில் செய்ய கூடிய ரிச்சான இனிப்பு.
-vijisvegkitchen-
Post a Comment