மோர்க்குழம்பு இடியாப்பம்
தேவையானவை: இட்லி அரிசி - 250 கிராம், புளிக்காத தயிர் - 500 மில்லி, தனியா, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, அரிசி - தலா ஒரு டீஸ்பூன், வெந்தயம் - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - இரண்டு, நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு சிறிய கப், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: இடியாப்பத்தை பக்கம் 104-ல் இருக்கும் இனிப்பு இடியாப்பத்தில் சொல்லப்பட்டிருப்பது போல தயாரித்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு தனியா, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, வெந்தயம், துவரம்பருப்பு, அரிசி ஆகியவற்றை வறுத்து, தேங்காய் துருவல் சேர்த்து நைஸாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். தயிரைக் கடைந்து, அரைத்ததை சேர்த்து, உப்பு சேர்த்து லேசாக சூடுபடுத்தவும் (கொதிக்க வைக்கக் கூடாது). இந்த மோர்க்குழம்புடன் இடியாப்பத்தை சேர்த்துக் கலக்கி, பரிமாறவும்.
குறிப்பு: வெண்டைக்காயை நறுக்கி, எண்ணெய் விட்டு வதக்கி, குழம்புடன் சேர்க்கலாம்.

Post a Comment