உளுந்து இடியாப்பம்
தேவையானவை: இட்லி அரிசி - 250 கிராம், உளுத்தம்பருப்பு - 100 கிராம், பச்சை மிளகாய் - ஒன்று, கடுகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு, நெய் - 4 டீஸ்பூன், நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: இடியாப்பத்தை பக்கம் 104-ல் இருக்கும் இனிப்பு இடியாப்பத்தில் சொல்லப்பட்டிருப்பது போல தயாரித்துக் கொள்ளவும்.
உளுத்தம்பருப்பை ஊற வைத்து, களைந்து, வடிகட்டி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும். இட்லித் தட்டில் சிறிதளவு எண்ணெய் தடவி, அரைத்த உளுத்தம்பருப்பை வேகவிட்டு எடுக்கவும். அதை ஒரு தட்டில் போட்டு உதிர்த்துக் கொள்ளவும். வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து, பெருங்காயத்தூள் சேர்த்து, உதிர்த்த உளுந்தை சேர்த்துக் கிளறவும். இதை இடியாப்பத்துடன் சேர்த்து, நெய் விட்டு நன்றாகக் கலக்கவும்.

Post a Comment