பாலுக்கு உறை மோர் இல்லாவிட்டால் ஒரு பச்சை மிளகாய் காம்பை பாலில் கிள்ளிப் போட்டால் கெட்டித் தயிர் தயாராகிவிடும்.
இஞ்சியைத் துணியில் சுற்றி தண்ணீர் குடத்தின் மேல் வைத்திருந்தால் 10 நாட்கள் வரை கெடாது.
துவரம் பருப்புடன் இரண்டு சொட்டு கடலை எண்ணெய்விட்டு வேக வைத்தால் பொங்காமல் இருக்கும்.
எலுமிச்சம் பழத்தை ஒருமணி நேரம் தண்ணீரில் போட்டு எடுத்து வைத்தால் ஆறு நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.
இட்லி மாவு, தோசை மாவு பொங்காமலிருக்க வாழை இலையைப் போட்டு மூடி வைக்க வேண்டும்.
காபிக்கு பால் நன்றாக காயக் கூடாது.
கீரைகளை மூடி போட்டு சமைக்கக் கூடாது.
சிறிது உப்பு கரைத்த நீரில் தக்காளியைப் போட்டு வைத்தால் இரண்டு நாள்கள் வரை கெடாது.
Post a Comment