மணக்குதே... ருசிக்குதே...
தக்காளி குழம்பு
தேவையானவை: நாட்டுத் தக்காளி, பெங்களூர் தக்காளி - தலா 2 (மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைக்கவும் அல்லது பொடியாக நறுக்கவும்), கீறிய பச்சை மிளகாய் - 1, பூண்டு - 2 பல், பொடியாக நறுக்கிய தேங்காய் - சிறிதளவு, சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், தனியாத்தூள் - 2 டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்), கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, தேங்காயைப் போட்டு... பொரிந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். தீயைக் குறைத்து, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் போட்டு வதக்கி, நறுக்கிய தக்காளிகளைப் போட்டு, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். பச்சை வாசனை போனதும், சீரகத்தூள், அரைத்த தக்காளி விழுது (அ) பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து சிறிது நேரம் வதக்கி, தேவையான அளவு தண்ணீர் விட்டு, எண்ணெய் பிரிந்து வந்ததும், கொத்தமல்லி தூவி இறக்கவும்.
சுக்கு குழம்பு
தேவையானவை: சுக்கு - ஒரு சிறிய துண்டு, மிளகு - 2 டீஸ்பூன், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - ஒரு கப், நறுக்கிய தக்காளி - கால் கப், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சுக்கு, மிளகு, வெந்தயத்தை எண்ணெய் விடாமல் தனித்தனியே வறுத்து, ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதில் நறுக்கிய தக்காளியைப் போட்டு வதக்கி, புளிக் கரைசல் விட்டு உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்க்கவும். எண்ணெய் பிரிந்து வரும்போது பொடித்த சுக்கு கலவையைச் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

வேர்க்கடலை குழம்பு
தேவையானவை: வேர்க்கடலை - அரை கப் (ஊற வைத்து, வேக வைக்கவும்), தேங்காய் துண்டுகள் - 2 (அரைக்கவும்), கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், புளிக் கரைசல், பொடியாக நறுக்கிய வெங்காயம் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் புளிக் கரைசலை விட்டு... அரைத்த தேங்காய், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு போட்டு, தேவையான தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். வேக வைத்த வேர்க்கடலையைச் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் தீயைக் குறைத்து வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகத்தூள், கறிவேப்பிலை போட்டு, பொரிந்ததும் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். பொன்னிறமாக வந்ததும் கொதிக்கும் குழம்பில் கொட்டி இறக்கவும்.
பிடிகருணை குழம்பு
தேவையானவை: பிடிகருணை - கால் கிலோ (வேக வைத்து, தோலுரித்து, வட்டமாக நறுக்கவும்), சின்ன வெங்காயம் - 10 (ஒன்றிரண்டாக தட்டிக் கொள்ளவும்), கீறிய பச்சை மிளகாய் - 2, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - இரண்டரை டீஸ்பூன், தேங்காய்ப்பால் - ஒரு கப், புளி - எலுமிச்சை அளவு (கரைத்துக் கொள்ளவும்), வறுத்து பொடித்த சீரகம் - 2 டீஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு
செய்முறை: அடி கனமான பாத்திரத்தில் புளிக் கரைசல், வெங்காயம், சீரகம், கீறிய பச்சை மிளகாய், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு போட்டு, எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்து மூடி, கொதிக்க வைக்கவும். நன்றாகக் கொதித்ததும் தேங்காய்ப்பால், வேக வைத்த கிழங்கை சேர்த்து மிதமான தீயில் தளதளவென கொதிக்க வைத்து, எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும்.அரைக்கீரை குழம்பு
தேவையானவை: அரைக்கீரை - ஒரு சிறிய கட்டு (ஆய்ந்து, கழுவி நறுக்கிக் கொள்ளவும்), பச்சை மிளகாய் - 3, பூண்டு - 5 பல், நாட்டுத் தக்காளி - 4, சின்ன வெங்காயம் - 5, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பச்சை மிளகாய், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். வெங்காயத்தை தோல் உரித்துக் கொள்ளவும். குக்கரில் கீரை, பச்சை மிளகாய், பூண்டு, சின்ன வெங்காயம், தக்காளியைப் போட்டு, சிறிது தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து, மூன்று விசில் வந்ததும் இறக்கி, உப்பு சேர்த்து மத்தினால் நன்றாகக் கடையவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, சீரகம் போட்டு, பொரிந்ததும் கீரைக் கலவையில் சேர்த்துக் கடையவும்.
மோர்க் குழம்பு
தேவையானவை: தேங்காய் துண்டுகள் - 2, பொட்டுக்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 3, பூண்டு - ஒரு பல், இஞ்சி - சிறிய துண்டு, சீரகம் - 2 டீஸ்பூன் (இவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்துக் கொள்ளவும்), மோர் - ஒரு கப், மஞ்சள்தூள், வெந்தயம் - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, பெருங்காயம், வெண்டைக்காய் (அ) கத்திரிக்காய் வத்தல் (எண்ணெயில் வறுத்துக் கொள்ளவும்), வெள்ளரிக்காய், கொத்தமல்லி - சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அடி கனமான பாத்திரத்தில் மோரை விட்டு, அரைத்த தேங்காய் கலவை, மஞ்சள்தூள், உப்பு போட்டு அடுப்பில் வைத்து மிதமான தீயில் கிளறவும். கலர் மாறியதும், சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து, வறுத்த வத்தல், வெள்ளரிக்காயைச் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வறுத்து குழம்பில் கொட்டி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.வெண்டைக்காய் குழம்பு
தேவையானவை: மிதி பாகற்காய், சின்ன வெங்காயம் - தலா அரை கப், பூண்டு - 4 பல், தக்காளி - 2, கறிவேப்பிலை - சிறிதளவு, தேங்காய்ப்பால் - ஒரு கப், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், குழம்பு பொடி - 2 டீஸ்பூன், புளி - எலுமிச்சை அளவு, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்தூள், உப்பு - தேவையான அளவு,
செய்முறை: மிதி பாகற்காயை காம்பு நீக்கி கழுவி, இரண்டாக நறுக்கி, சிறிது உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து... நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, பூண்டு, தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். இதில் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், குழம்பு பொடி, வேக வைத்த பாகற்காய் போட்டு மறுபடியும் வதக்கி, புளியைக் கரைத்து ஊற்றி, நன்றாகக் கொதித்ததும் தேங்காய்ப்பால் சேர்த்து, எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும்.
பச்சை மொச்சைப் பயறு குழம்பு
தேவையானவை: பச்சை மொச்சைப் பயறு - கால் கிலோ, வெங்காயம், தக்காளி - தலா 1, புளி - நெல்லிக்காய் அளவு, பூண்டு - 2 பல், தேங்காய் துண்டுகள் - 2, சீரகம் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்தூள் - 2 டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். தேங்காய், சீரகத்தை அரைத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும். பூண்டு, தக்காளி சேர்த்து சிறிது நேரம் வதக்கி, பச்சை மொச்சைப் பயறு போட்டு வதக்கவும். புளியை கரைத்து விட்டு... தேங்காய்-சீரகம் விழுது, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு, கறிவேப்பிலை எல்லாவற்றையும் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு, குக்கரை மூடி, 4 விசில் வந்ததும் இறக்கவும்.வத்தல் குழம்பு
தேவையானவை: ஏதேனும் ஒரு வத்தல் - ஒரு கப் (சிறிது எண்ணெயில் வறுத்துக் கொள்ளவும்), கடுகு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, புளி - எலுமிச்சை அளவு, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், குழம்பு பொடி - 2 டீஸ்பூன், நறுக்கிய சின்ன வெங்காயம் - ஒரு கப், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள், உப்பு - தேவையான அளவு,
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, வெந்தயம், உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து... வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், குழம்பு பொடி, வறுத்த வத்தல், உப்பு சேர்த்து, புளியைக் கெட்டியாக கரைத்து ஊற்றி, நன்றாகக் கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும்.
உருளைக்கிழங்கு மசாலா குழம்பு
தேவையானவை: உருளைக்கிழங்கு - கால் கிலோ, பூண்டு - 2 பல், வெங்காயம், தக்காளி, கீறிய பச்சை மிளகாய் - தலா 1, புளி - நெல்லிக்காய் அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், மஞ்சள்தூள் - தலா அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு, குழம்பு பொடி - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள், உப்பு - தேவையான அளவு,
செய்முறை: உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், கடலைப்பருப்பு போட்டு தாளித்து... நறுக்கிய வெங்காயம், பூண்டு, கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, தக்காளி, உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், குழம்பு பொடி சேர்த்து வதக்கி, புளியைக் கரைத்து ஊற்றி, உப்பு போட்டு, நன்றாகக் கொதித்ததும் இறக்கவும்.வெந்தயக்கீரை குழம்பு
Post a Comment