BREAKING NEWS

Category 5

Category 6

Category 7

Wednesday, August 21, 2013

கொத்தமல்லி சப்பாத்தி

காலையில் எளிமையான முறையில் வித்தியாசமான மற்றும் ஆரோக்கியத்தை தரும் வகையில் ஒரு சப்பாத்தி செய்ய நினைத்தால், அதற்கு கொத்தமல்லி சப்பாத்தி சரியானதாக இருக்கும். அந்த கொத்தமல்லி சப்பாத்தியை செய்வது மிகவும் ஈஸியானது. மேலும் இந்த சப்பாத்திக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் வீட்டு சமையலறையில் இருப்பவையே.
இப்போது அந்த கொத்தமல்லி சப்பாத்தியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!





தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 2 கப்
கொத்தமல்லி - 3 கப் (நறுக்கியது)
சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
கடலை மாவு - 3 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பௌலில் கோதுமை மாவு, உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை ஈரத் துணியால் மூடி, சிறிது நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு பௌலில் கொத்தமல்லி, சீரகம், மஞ்சள் தூள், கடலை மாவு, பச்சை மிளகாய் ஆகியவற்றைப் போட்டு, நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பிறகு சப்பாத்தி மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, அதனை சப்பாத்தி போன்று தேய்த்து, நடுவே சிறிது கொத்தமல்லி கலவையை வைத்து மூடி, மீண்டும் சப்பாத்தி போன்று தேய்த்துக் கொள்ள வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் தேய்த்துக் கொள்ள வேண்டும்.
இறுதியில் ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், தேய்த்து வைத்துள்ள சப்பாத்திகளை ஒவ்வொன்றாக போட்டு எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் வேக வைத்து எடுக்க வேண்டும்.
இப்போது சூப்பரான கொத்தமல்லி சப்பாத்தி ரெடி!!! இதனை பன்னீர் மசாலாவுடன் சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

tamil.boldsky

Post a Comment

 
Copyright © 2013 சமையல் குறிப்புக்கள்
Shared by WpCoderX