BREAKING NEWS

Category 5

Category 6

Category 7

Saturday, June 22, 2013

செய்முறை முட்டைகோஸ் பொரியல்

பொரியலில் நிறைய உள்ளன. ஒவ்வொன்றும் விருப்பதைப் பொறுத்ததே. அந்த வகையில் இங்கு முட்டைகோஸ் பொரியலை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். இதன் செய்முறை மிகவும் எளிமையானது. அதிலும் இதனை சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால், இதன் சுவைக்கு அளவே இல்லை.
சரி, அந்த முட்டைகோஸ் பொரியலை எப்படி செய்வதென்று பார்ப்போம்.



தேவையான பொருட்கள்:
முட்டைகோஸ் - 1 (சிறியது)
வெங்காயம் - 3-4 (சிறியது மற்றும் நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
கடுகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
துருவிய தேங்காய் - 1/2 கப்
தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் முட்டைகோஸை நன்கு பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயத் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதில் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து 1 நிமிடம் வதக்கி, நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின் அதில் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி விட்டு, இறுதியில் முட்டைகோஸ் சேர்த்து, 1/2 கப் தண்ணீர் ஊற்றி, உப்பு போட்டு, மூடி வைத்து 5-10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
தண்ணீரானது நன்கு வற்றிய பின், அதில் துருவிய தேங்காய் சேர்த்து கிளறி இறக்கினால், சூப்பரான முட்டைகோஸ் பொரியல் ரெடி!!!
குறிப்பு:
முட்டைகோஸ் வேகவில்லையெனில், மேலும் சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைக்கலாம். வேண்டுமெனில் பச்சை மிளகாய்க்கு பதிலாக வரமிளகாயை பயன்படுத்தலாம்.

Post a Comment

 
Copyright © 2013 சமையல் குறிப்புக்கள்
Shared by WpCoderX