BREAKING NEWS

Category 5

Category 6

Category 7

Wednesday, June 26, 2013

ஈஸியான... காளான் சூப்

அனைவருக்குமே சூப் என்றால் மிகவும் பிடிக்கும். பொதுவாக வீட்டில் காய்கறி சூப் மட்டும் தான் செய்வோம். மேலும் வேறு ஏதாவது வித்தியாசமான சூப் சாப்பிட நினைத்தால், கடைக்கு தான் செல்வோம். ஆனால் வீட்டிலேயே அனைத்து வகையான சூப்புகளையும் எளிதில் செய்யலாம். மேலும் சூப் டயட் மேற்கொள்வோருக்கு நல்ல ஒரு ஸ்நாக்ஸ்.

அந்த வகையில் இப்போது காளான் சூப்பை எப்படி எளிமையான முறையில் செய்வது என்று பார்ப்போம்.





தேவையான பொருட்கள்:

காளான் - 200 கிராம் (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
புதினா மற்றும் மல்லி - சிறிது (நறுக்கியது)
சோள மாவு - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வெண்ணெய் - தேவையான அளவு
மிளகு தூள் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் பாதி அளவு தண்ணீர் நிரப்பி, அடுப்பில் வைத்து நீரை நன்கு கொதிக்க விட வேண்டும்.

தண்ணீரானது நன்கு கொதித்ததும், அதில் பொடியாக நறுக்கிய காளானை சேர்த்து, 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி, நீரை வடித்து காளானை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கிளறி விட வேண்டும்.

அடுத்து புதினா மற்றும் மல்லியை சேர்த்து 1 நிமிடம் வதக்கி, பின் 1 டேபிள் ஸ்பூன் சோள மாவை சேர்த்து கிளற வேண்டும்.

பின்பு மீதமுள்ள சோள மாவு மற்றும் உப்பை, தேவையான அளவு தண்ணீரில் கரைத்து, வாணலியில் ஊற்றி 3-4 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

பிறகு வேக வைத்துள்ள காளானை அத்துடன் சேர்த்து, 10 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.

இப்போது சுவையான காளான் சூப் ரெடி!!! இதன் மேல் மிளகு தூள் சேர்த்து பரிமாறினால் சூப்பராக இருக்கும்.

Post a Comment

 
Copyright © 2013 சமையல் குறிப்புக்கள்
Shared by WpCoderX