BREAKING NEWS

Category 5

Category 6

Category 7

Thursday, November 28, 2013

பீட்ரூட் கேசரி / Beetroot Kesari



பீட்ரூட்டினை பல வகைககளில் நாம் சமைத்து சாப்பிடலாம். நார்மலாக நாம் செய்யும் ரவா கேசரியில் பீட்ரூட் சாறும் , துருவிய பீட்ரூட்டும் சேர்த்து இதில் செய்துள்ளேன்.
பீட்ரூட்டில் நிறைய உணவுச் சத்துகள் உண்டு. விட்டமின் சி, பொட்டாசியம், ஃபோலாசின், பீட்டா கரோட்டின், மாவுச்சத்து, இரும்புச் சத்து இதில் அதிகம் . வாரம்ஒரு முறை அல்லது இரண்டு முறை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். (தினமும் சாப்பிடுவோம் என்று அடம்பிடிப்பவர்கள் தினமும் சேர்த்துக்கொள்ளலாம்)
:-
தேவையான பொருட்கள் :
ரவை - 1கப்
சீனி - 1கப்
தண்ணீர் - 2கப்
துருவிய பீட்ரூட் - 1/4 கப்
பீட்ரூட் சாறு - 1/4கப்
நெய் - 3 - 5ஸ்பூன் முந்திரி - 10
ஏலக்காய் பொடி - 1/2ஸ்பூன்
* சின்ன பீட்ரூட் ஒன்றினை எடுத்து அதனை சின்ன துருவலில் துருவிக் கொள்ளவும்.
* துருவிய பீட்ரூட்டினை கைகலால் பிழிந்து சாறு எடுத்து தனியாக வைக்கவும்.
* கடாயில் 3ஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்த பின்பு முந்திரி போட்டு வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
:-
* அதே கடாயில் ரவையினை வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
* கடாயில் 2 கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதி வரும் பொழுது மெல்ல வறுத்த ரவையினை சேர்க்கவும். கட்டி விழாமல் கரண்டி வைத்து கலக்கவும்.
* கொஞ்சம் ரவை திக்கானவுடன், சீனி, துருவிய பீட்ரூட், பீட்ரூட் சாறு சேர்த்து மீண்டும் கட்டி விழாமல் கிண்டி விடவும்.
:
* கடைசியாக 2 ஸ்பூன் நெய்,ஏலக்காய் பொடி, முந்திரி சேர்த்து கிண்டி அடுப்பினை அணைக்கவும்.
* தட்டில் நெய் தடவி அதில் கேசரியினை பரப்பி வைக்கவும். 15 நிமிடங்கள் கழித்து விரும்பிய வடிவில் கட் பண்ணி பரிமாறவும்.
:-
பீட்ரூட்டில் இருக்கும் முக்கியமான தன்மை இதில் கொழுப்புச் சத்து கிடையாது. இதை ஒரு காலத்தில் ஐரோப்பாவில் புற்றுநோய்த் தடுப்பாக பயன்படுத்தினார்கள். இதன் சிவப்பு வண்ணத்தில் (பீட்டா கரோட்டின்) புற்றுநோய் தடுப்புத் தன்மை சேர்ந்திருப்பதால் புற்றுநோயுடன் போராடும் சக்தி உள்ளது. மேலும் பீட்ரூட் நமது உடலின் ஆக்ஸிஜன் உறிஞ்சும் சக்தியை அதிகரிக்கிறது. இதே சிவப்பு நிறத்தில் ஃபோலாசின், பீட்டா கரோட்டின் இருப்பதால், பெண்களின் உடல்நலத்துக்குமிகச் சிறந்தது. முக்கியமாக கருத்தரிக்கும் பெண்களுக்கு தேவையான சத்துகள் நிறைய இருக்கின்றன.
:-
நன்றி என் இனிய இல்லம் முகநூல்

Post a Comment

 
Copyright © 2013 சமையல் குறிப்புக்கள்
Shared by WpCoderX