BREAKING NEWS

Category 5

Category 6

Category 7

Saturday, November 9, 2013

பாதுஷா




பாதுஷா..மிகச்சிலரைத் தவிர பெரும்பாலானவர்களின் விருப்பமான இனிப்பு ..சந்தேகமில்லாமல் நான் பெரும்பாலானவர்பக்கம்தான்புன்னகை

இங்கே தென்னிந்திய இனிப்புகள் அதிகள் கிடைப்பதில்லை..இணையத்தின் உதவியோடு நான் செய்யும் மூன்றாவது பாதுஷாஎக்ஸ்பெரிமென்ட் ...இது தான் பொங்கலுக்கு எங்க வீட்டு ஸ்வீட்! நல்லாயிருக்கா? புன்னகை
பாதுஷா

தேவையான பொருட்கள் 
மைதா
 மாவு / ஆல் பர்ப்பஸ் ஃப்ளோர் - 1கப் 
பேக்கிங் சோடா - 1/4ஸ்பூன்
வெண்ணை - 115 கிராம்
சர்க்கரை - 1 1/2கப் 
தண்ணீர்
 - 1/4 கப் 
கேசரி
 பவுடர் - 1/4 ஸ்பூன் 
எண்ணெய்
 - பொரிக்கத் தேவையான அளவு. 

செய்முறை
 
மைதாவுடன்
 பேக்கிங் சோடா சேர்த்து சலிக்கவும். வெண்ணையை உருக்கிக்கொண்டு அதனுடன் சலித்தமாவை சிறிது சிறிதாக சேர்த்துக் கலக்கவும். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் சேர்த்து மாவைநன்றாகப் பிசைந்து கொள்ளவும். [குறைந்தது 15 நிமிடம் புன்னகை ] 

சர்க்கரையை
 பாத்திரத்தில் போட்டு ஒண்ணரை கப் தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும்பாகு கொதி வரஆரம்பித்த பின் ஏழு நிமிடங்கள் கழித்து அடுப்பிலிருந்து இறக்கிவிடவும். பிசைந்த மாவை சம அளவுஉருண்டைகளாக உருட்டிக் கொண்டுஓரொரு உருண்டையையும் உள்ளங்கைகளின் நடுவே வைத்து அழுத்திபாதுஷா வடிவம் கொண்டு வரவும். 

மிதமான
 சூட்டில் எண்ணெயை காயவைக்கவும்சிறிதளவு மாவை எண்ணெயில் போட்டால் சிறிது நேரம்கழித்துத்தான் அது மேலே வர வேண்டும்அதுதான் சரியான பதம்அப்பொழுது எண்ணெய்ப் பாத்திரத்தைஅடுப்பிலிருந்து இறக்கிபாதுஷாக்களை ஒன்றொன்றாக எண்ணெயில் போடவும்சிறிது நேரத்தில் அவைஎண்ணெயில் மிதக்க ஆரம்பித்ததும் எண்ணெய்ப் பாத்திரத்தை அடுப்பில் வைக்கவும்.
பாதுஷாக்கள் பொன்னிறமானதும் எடுக்கவும். [ சுமார் 15-17 நிமிடங்கள் ஆகும்.] பொரித்த பாதுஷாக்களைமிதமான சூட்டில் உள்ள பாகில் போட்டு பத்து நிமிடங்கள் ஊற விடவும்ஊறியதும் எடுத்து தட்டில்அடுக்கவும்.
2 ஸ்பூன் சர்க்கரையை ஒரு ஸிப்-லாக் கவரில் எடுத்துஅதனுடன் ஒரு துளி மஞ்சள்ஒரு துளி சிவப்புநிறங்களை சேர்க்கவும்ஸிப்-லாக் கவரை லாக் செய்துகொண்டு வண்ணங்கள் சர்க்கரையுடன் சேரும்படிகலக்கவும். சர்க்கரைப்பாகு மீதமிருந்தால் பாதுஷாக்களின் மீது ஊற்றி விட்டுகலர்ப்பொடி கலந்தசர்க்கரையை மேலே தூவி அலங்கரிக்கவும். ருசியான பாதுஷாக்கள் ரெடி!





குறிப்பு :
கொஞ்சம் நேரத்தையும்,பொறுமையையும் தாராளமாகச் சேர்த்தால் சுவையான பாதுஷாக்கள்சுவைக்கலாம்..மாவு பிசையும் நேரமும்பாதுஷாக்களை பொரிக்கும் நேரமும்தான் கொஞ்சம்நீளம்..ஆனால்பைனல் அவுட்கம்-ஐப் பாத்தீங்கன்னாசெலவு செய்த நேரம் வீணாகலைன்னு நீங்களேஉணர்வீங்க



by மகி

Post a Comment

 
Copyright © 2013 சமையல் குறிப்புக்கள்
Shared by WpCoderX