தேவையான பொருள்கள்:
மில்க்மெய்ட் – 3/4 டின்
பால் – 1/2 லிட்டர்
பால் க்ரீம் – 1 1/2 கப்
வெனிலா எசன்ஸ்
செய்முறை:
பாலை நன்கு காய்ச்சி ஆறவைத்துக் கொள்ளவும்.
க்ரீமை லேசாக மிக்ஸியில் அடித்துக் கலந்து கொள்ளவும்.
க்ரீமுடன் மில்க்மெயிட், பால் மற்றும் சில சொட்டுகள் எசன்ஸ் சேர்த்துக் கொள்ளவும்.
இறுக்கமான அலுமினியம் டப்பா அல்லது வேறு உறைய வைக்கும் கண்டெய்னரில் கலவையை ஊற்றி ஃப்ரீசரில் இரண்டு மணி நேரம் வைக்கவும். கலவை டப்பாவில் முக்கால் அளவு மட்டும் இருக்குமாறு கண்டெயினர் பெரிதாக இருக்கட்டும்.
பாதி உறைந்ததை எடுத்து மீண்டும் மிக்ஸியில் மிக மிக மென்மையாக ஆகும்வரை அடித்துக் கலக்கவும்.
மீண்டும் அதே கண்டெயினரில் ஊற்றி ப்ரீசரில் நன்கு உறைய வைத்து (4 மணி நேரம் ஆகலாம்) உபயோகிக்கவும்.
* கன்டென்ஸ்டு மில்க்: ஒரு லிட்டர் பாலை அரை லிட்டருக்கும் கீழாக மில்க்மெய்ட் consistency அளவுக்குக் குறையும்வரை அடுப்பில் வைத்து நிதானமான தீயில் காய்ச்சவும். காய்ச்சும்போது 150 கிராம் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும். Non-stickல் இதைச் செய்வது சுலபம்.
* மில்க் க்ரீம்: அன்றாடம் பால் காய்ச்சும்போது நிதானமான சூட்டில் அல்லது சிம்மில் வைத்து பாலைக் காய்ச்சி, ஆறவைத்து ப்ரிட்ஜில் வைக்கவும். மேலாக திடமான க்ரீம் சேர்ந்திருக்கும். இதை ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கொண்டே வரவும். தேவையான அளவு க்ரீம் சேர்ந்ததும் 2 டேபிள்ஸ்பூன் பாலைக் கலந்து மேலே சொன்ன மாதிரி மிக்ஸியில் அடித்துக் கலந்து கொள்ளலாம். அல்லது அமுல் கம்பெனியின் பால் க்ரீம் தரமானதாக இருக்கும். மற்றவையும் உபயோகிக்கலாம்.
* க்ரீமை மிக்ஸியில் மோர் கடையும் பிளேடால் வைப்பர் பட்டன் அல்லது ரிவர்சில் ஒரு சில செகண்டுகள் மட்டும் சுற்றிக் கொள்ளவும். (அதிகம் சுற்றினாலோ, வேறு பிளேடு உபயோகித்தாலோ, வெண்ணை தனியாக வந்துவிடும். :அனுபவம்:
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
இதன் மேலே அல்லது இதனுள்ளே அநேக பொருள்களை இஷ்டம் போல் சேர்த்து அனுபவிக்கலாம். இப்பொழுதைக்கு ஒன்று..
1/2 கப் பால், 2 அல்லது 3 டேபிள்ஸ்பூன் கோக்கோ பவுடரை நன்கு கலந்து கொண்டு அத்துடன் மீதி இருக்கும் 1/4 டின் மில்க்மெய்ட், 50 கிராம் வெண்ணையைச் சேர்த்து லேசாக அடுப்பில் வைத்து ஏடு வரும்வரை காய்ச்சி (கிளறிக்கொண்டே இருந்தால் ஏடு வராது, ஆனால் விழுதாக இறுகி ஒரு glossyness தெரியும்), ஆறவைத்து ஐஸ்கிரீம் மேல் சாஸ் மாதிரி ஊற்றிச் சாப்பிடலாம்.

Post a Comment