பசலைக்கீரை ஆம்லெட்
காலை வேளையில் எளிமையான முறையில் செய்யக்கூடிய ஒரு ஆரோக்கியமான உணவை சாப்பிட நினைத்தால், பசலைக்கீரை ஆம்லெட் செய்து சாப்பிடுங்கள். ஏனெனில் இந்த ரெசிபியில் உள்ள பசலைக்கீரை மற்றும் முட்டையைக் கொண்டு போடப்படும் ஆம்லெட்டில், உடலுக்கு வேண்டிய அனைத்து சத்துக்களும் கிடைத்து, அந்த நாள் முழுவதும் நன்கு சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். மேலும் இந்த ரெசிபியை குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். குறிப்பாக காலையில் ஒரு டம்ளர் பால் குடித்துவிட்டு, இந்த பசலைக்கீரை ஆம்லெட் போட்டு சாப்பிட்டால், வயிறு நிறையும்.
பசலைக்கீரை ஆம்லெட் தேவையான பொருட்கள்:
முட்டை - 2
பசலைக்கீரை - 1 கப்
சீஸ் - 1 கட்டி (துருவியது)
மிளகு - 1/2 டீஸ்பூன்
உலர்ந்த கற்பூரவள்ளி இலை - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - 1 கட்டு (நறுக்கியது)
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
பால் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நன்கு கொதிக்க விட வேண்டும். தண்ணீரானது நன்கு கொதித்ததும், அதில் பசலைக்கீரையை போட்டு, மூடி வைத்து 2-3 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும். பின்னர் அதில் உள்ள நீரை வடித்துவிட்டு, கையால் அதனை லேசாக பிசைந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு பௌலில் முட்டைகளை உடைத்து ஊற்றி, பால், உப்பு, மிளகு மற்றும் உலர்ந்த கற்பூரவள்ளி இலைகளைப் போட்டு நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பிறகு அதில் பசலைக்கீரை மற்றும் கொத்தமல்லியைப் போட்டு, மீண்டும் நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். இறுதியில் ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் போட்டு உருகியதும், அடித்து வைத்துள்ள முட்டைக் கலவையை ஆம்லெட்டுகளாக ஊற்றி, சீஸை தூவி, முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், சூப்பரான பசலைக்கீரை ஆம்லெட் ரெடி!!!

Post a Comment