தேவையானவை
பெரிய கத்திரிக்காய் - 2
தக்காளி - 2
வெங்காயம் (பெரியது) - 1
இஞ்சி - சிறு துண்டு
பூண்டு - 4 பற்கள்
சீரகம் - அரை டீஸ்பூன்
கரம் மசாலா - 2 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்
மிளகாய் பொடி - 2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
கத்திரிக்காயில் நிறைய எண்ணெய் தடவி அடுப்பில் சுட்டு தோலுரித்துக் கொள்ளவும். பின்னர் தோலுரித்த கத்திரிக்காயை மசித்துக் கொள்ளவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அடி அகன்ற - கனமான வாணலியில் எண்ணெய் விட்டு, சீரகம் தாளித்து, வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். இஞ்சி, பூண்டை நன்றாக அரைத்து விழுதாக்கிக் கொள்ளவும். அரைத்த விழுதினை வெங்காயத்தோடு சேர்த்து அதில் தக்காளி, உப்பு, மஞ்சள்பொடி, கரம் மசாலாபொடி சேர்த்து சுருள வதக்கவும். பிறகு இதில் மசித்து வைத்த கத்திரிக்காயைச் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும். கத்தரிக்காய் கலவை சற்று கெட்டியாக வந்ததும் இறக்கவும். இதன் மேல் பொடியாக நறுக்கிய கொத்தமல்லியைத் தூவி அலங்கரிக்கவும். சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ள இந்த சைட் டிஷ் மிக அருமையாக இருக்கும்.

Post a Comment