BREAKING NEWS

Category 5

Category 6

Category 7

Saturday, November 30, 2013

டிப்ஸோ டிப்ஸ்

சமையல் எண்ணெயை பாட்டிலில் வடித்த பிறகு, அந்தக் கவரில் மண் நிரப்பி ஊதுபத்தியால் இருபுறமும் ஓட்டை போட்டு, மணி ப்ளான்ட், செம்பருத்தி போன்ற செடிகளை வளர்க்கலாம். ஜன்னல் ஓரங்களில் வைத்தால் அழகாக இருக்கும்.



சிறிது கற்பூரத்தையும், உப்பையும் தண்ணீரில் கரைத்து அந்தக் கரைசலை ஈக்கள் உள்ள இடத்தில் தெளித்தால் ஈயின் தொல்லை அறவே இருக்காது.



பித்தளை பாத்திரங்களை கழுவிய பிறகு தோல் சீவிய உருளைக்கிழங்கை பாத்திரத்தின் மீது தேய்த்துப் பாருங்கள். புதுசு போல மின்னும்.



மாத்திரைகளை அதன் முழு அட்டையோடு உபயோகிக்கிறீர்களா? அப்படியானால் அட்டையில் காலாவதி தேதி அச்சடிக்கப்பட்டிருக்கும் வரிசையை விட்டுவிட்டு அச்சடிக்கப்படாத வரிசை மாத்திரைகளை முதலில் உபயோகியுங்கள். காலாவதி தேதி அருகே இருக்கும் மாத்திரைகளைக் கடைசியில் சாப்பிட்டால், அட்டையில் உள்ள மாத்திரைகளின் காலாவதி தேதி எது என்பதைக் கடைசி வரை தெரிந்து கொள்ள முடியும்.



பீட்ரூட்டைத் தோலுடன் வேக வைத்து, பின்பு தோலெடுத்தால் சீக்கிரம் தோல் பிரிந்துவிடும். நறுக்குவதும் சுலபம்.



வேக வைத்த காய்கள், ஊற வைத்த அரிசி, பருப்பு வகைகள் போன்றவற்றை வடிகட்டும் போது முதலில் வடிகட்டியில் அல்லது சல்லடையில் ஒன்றிரண்டு தேக்கரண்டிகள் அல்லது ஃபோர்க்குகளை கிராஸôக வைத்துவிட்டு, பின்னர் வெந்த காய்கள் அல்லது அரிசியைப் போட்டால் ஒரு சொட்டு கூட தண்ணீர் நிற்காமல் உடனே வடிந்துவிடும்.



உடைகள் தைக்க பேப்பர் கட்டிங்குகள் வைத்தால் சீக்கிரம் கிழிந்துவிடும். சாதாரண பேப்பருக்கு பதிலாக நோட்டு புத்தகத்துக்கு போடும் லாமினேட்டட் பிரவுன் கவரை உபயோகித்தால் நீண்ட நாள்கள் கிழியாமல் இருக்கும்.



கடையிலிருந்து மிளகாய் வற்றலை வாங்கி வந்ததும் கையோடு அதன் காம்புகளைக் கிள்ளிவிட்டால், இடத்தை அடைக்காமல் இருப்பதோடு பூச்சிகளும் வராது.



மழை நாளில் சாம்பார் பொடி, ரசப்பொடி அரைக்கும்போது ஒரு தேக்கரண்டி உப்பு போட்டு அரைத்தால் பூஞ்சை வராது.



பழைய காட்டன் புடவைகள் அல்லது துப்பட்டாக்களை நான்காக மடித்து ஓரங்களிலும் நடுவிலும் தைத்து பாத்ரூமில் மிதியடியாகப் போடலாம். இந்த மிதியடி நீரை நன்கு உறிஞ்சும்.



பொதுவாக உள்ளாடைகள், மெத்தை விரிப்புகள், கைக்குட்டைகள் ஆகியவற்றை லைட் கலரில் வாங்குவது நல்லது. அப்போதுதான் அழுக்கு பட்டால் உடனே தெரியும். தேக ஆரோக்கியத்தையும் காக்க முடியும்.

எச்.சீதாலெட்சுமி

Post a Comment

 
Copyright © 2013 சமையல் குறிப்புக்கள்
Shared by WpCoderX