தேவையானவை
கோதுமை மாவு - 2 கப்
பட்டாணி - 1 கப்
கொத்தமல்லி - அரைக்கட்டு
பச்சைமிளகாய் - 4
இஞ்சி - 1 துண்டு
நெய் அல்லது எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை
கோதுமை மாவை சிறிதளவு உப்பு, எண்ணெய் சேர்த்து பிசைந்து கொள்ளவும். பட்டாணியை நன்கு வேகவைத்து நீரை வடித்துவிட்டு அத்துடன் கொத்தமல்லி, இஞ்சி, பச்சைமிளகாய் சேர்த்து கெட்டியாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். தேவையான அளவு உப்பு சேர்த்து பிசைந்து சின்னச் சின்ன உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ளவும். பிறகு சப்பாத்தி மாவை சிறிதளவு எடுத்து கிண்ணம் போல நன்கு குழிவாகச் செய்து அதனுள் பட்டாணி விழுதை வைத்து நன்றாக மூடி சப்பாத்தி இடவும். உள்ளே இருக்கும் பட்டாணி விழுது வெளியே வந்துவிடாதபடி சப்பாத்திகளை இட்டு சூடான தோசைக்கல்லில் போட்டு சுற்றிலும் நெய் விட்டு இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு நன்கு வெந்தவுடன் எடுக்கவும். எப்போதும் ஆலு பரோட்டா தானா என்று கேட்பவர்களுக்கு இந்தப் புதிய பீஸ் சப்பாத்தி சுவையான மாறுதலாக இருக்கும். பைங்கன் பர்த்தாவோடு சுவைக்க, இன்னும் 2 சப்பாத்தி நிச்சயம் உள்ளே போகும்.
Post a Comment