BREAKING NEWS

Category 5

Category 6

Category 7

Sunday, November 10, 2013

கேழ்வரகு இட்லி

ஹெல்த் ஸ்பெஷல் - கேழ்வரகு இட்லி



இது சூப்பரான சத்தான கேழ்வரகு இட்லி. அரிசி இட்லியினை விட இந்த இட்லி மிகவும் பஞ்சு போல மென்மையாக இருக்கும். கேழ்வரகில் அதிக அளவு கால்சியம்(Calcium) இருக்கின்றது. அதனால் வளரும் குழந்தைகளுக்கு மிகவும் அவசியம்.

கேழ்வரகில் அதிக அளவு நார்சத்து(Dietary Fiber), புரோட்டின்(Protein) காணப்படுகின்றது. டயபெட்டிக், வயதனாவர்களுக்கு எற்ற உணவு.

தேவையான பொருட்கள் :
கேழ்வரகு மாவு - 2 கப்
உளுத்தம் பருப்பு - 3/4 கப்
உப்பு - 1 தே.கரண்டி

கேழ்வரகு இட்லி செய்முறை :

உளுத்தம் பருப்பினை குறைந்தது 1 மணி நேரமாவது ஊறவைக்கவும். ஊறவைத்த உளுத்தம் பருப்பினை, இட்லிக்கு அரைப்பது போல மைய அரைத்து கொள்ளவும். கேழ்வரகு மாவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக கரைத்து கொள்ளவும்.

கரைத்து வைத்த கேழ்வரகு மாவுடன் உப்பு + அரைத்த உளுத்தம் மாவினை சேர்த்து நன்றாக இட்லி மாவு பதத்திற்கு கலக்கவும்.( மிகவும் தண்ணீயாக கரைத்துவிட வேண்டாம்.) இதனை குறைந்தது 6 - 8 மணி நேரம் வைத்து புளிக்கவிடவும். ( இந்த மாவுக் புளிக்க , அரிசி மாவினை விட கொஞ்சம் நேரம் எடுக்கும்.)
புளித்த இட்லி மாவினை, இட்லி தட்டில் ஊற்றவும். இதனை இட்லி வேகவைப்பது போல 8 - 10 நிமிடங்கள் வேகவிடவும்.

இப்போது சுவையான சத்தான கேழ்வரகு இட்லி ரெடி.

கவனிக்க :

நாம் எப்பொழுதும் செய்யும் அரிசி இட்லியில், 1:3 அல்லது 1:4 என்ற விகிததில் தான் உளுந்தினை சேர்த்து இட்லி செய்வோம். அதே போல தான் கேழ்வரகு மாவிலும் செய்யவேண்டும். மிக்ஸியில் அரைப்பவர்கள் 1:3 என்று சேர்த்து கொள்ளலாம்.

நன்றி : உலக தமிழ் மக்கள் இயக்கம்முகநூல் பக்கம்

Post a Comment

 
Copyright © 2013 சமையல் குறிப்புக்கள்
Shared by WpCoderX