BREAKING NEWS

Category 5

Category 6

Category 7

Thursday, July 4, 2013

கோவக்காய் சட்னி



  • கோவக்காய் - 100 கிராம்
  • வெங்காயம் - பாதி
  • பூண்டு - 10 பல்
  • காய்ந்த மிளகாய் - 5
  • பச்சை மிளகாய் - 5
  • முழு தனியா - ஒரு மேசைக்கரண்டி
  • வெந்தயம் - அரை தேக்கரண்டி
  • புளி - சிறிது
  • உப்பு - தேவைக்கு ஏற்ப
  • எண்ணெய் - தேவைக்கு ஏற்ப
  • தாளிக்க:
  • கடுகு - கால் தேக்கரண்டி
  • கறிவேப்பிலை - சிறிது


தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நீளமாக நறுக்கி கொள்ளவும்.
கோவக்காயை நன்கு அலசி விட்டு இருமுனைகளையும் நறுக்கி எடுத்து விடவும். பிறகு நீளவாக்கில் நான்காக நறுக்கி கொள்ளவும்.
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு நறுக்கிய கோவக்காய், வெங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், வெந்தயம், முழு தனியா மற்றும் புளி எல்லாம் சேர்த்து நன்கு வதக்கவும்.
கோவக்காய் நன்கு வதங்கியதும், அடுப்பை நிறுத்திவிட்டு எல்லாவற்றையும் நன்கு ஆற வைக்கவும்.
பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அரைக்கும் போது, கோவக்காய் தவிர மற்ற பொருட்கள் சேர்த்து நன்கு அரைத்து விட்டு, கடைசியில் கோவக்காய் சேர்த்து அரைக்கவும்.
கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும். சுவையான கோவக்காய் சட்னி தயார். வழக்கமாக கோவைக்காயில் செய்யும் கூட்டு, சாம்பார், பொரியல் தவிர இந்த சட்னியும் செய்யலாம். இந்த கோவக்காய் சட்னி இட்லி, தோசைக்கு நன்கு பொருந்தும். சாதத்துடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும்

பச்சை மிளகாயினால் உண்டாகும் சூட்டை தணிக்க, இதில் சிறிது வெந்தயம் சேர்க்கிறோம். சட்னியை அரைத்த பின்(தாளிக்கும் முன்) மீண்டும் நன்கு வதக்கி கொண்டால் 2 அல்லது 3 நாட்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம். சுவையும் நன்றாக இருக்கும்.

Post a Comment

 
Copyright © 2013 சமையல் குறிப்புக்கள்
Shared by WpCoderX